முன்னுரை

இம்மாவட்டம் தமிழகத்தின், தென் கோடியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆகும். கன்னியாகுமரி மூன்று பக்கங்களில் நீரால் சூழப்பட்டுள்ளது. மேற்கில் அரபிக்கடலும் , தெற்கில் இந்துமகா சமுத்திரமும் , கிழக்கில் வங்காள விரிகுடாவும் சூழ்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் திருத்தலங்களும் , மனத்தைக் கொள்ளைக் கொள்ளும் சுற்றுலாத் தலங்களும் நிரம்பியுள்ளன. இவற்றில் முக்கியமான தலங்களுக்கு , நாம் சென்று மனதில் பக்தியினை வளர்த்து வருவோம்.

கன்னியாகுமரி தலம் இருப்பிடம்

இந்நகர் ஒரு தீபகற்பம் போன்று அமைந்துள்ளது. இந்நகர் தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து தெற்கில் 703 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுறத்திலிருந்து 80 கி.மீ கிழக்கிலும் அமைந்துள்ளது. முதலில் இம்மாவட்டம் கேரளத்தோடு சேர்ந்திருந்து பின்னர் தான் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டது. இந்தியாவின் கடைக்கோடி புகைவண்டி நிலையமான கன்னியாகுமரி , இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இருப்புப்பாதை மற்றும் சாலைப் போக்குவரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தேவி கன்னியாகுமரி திருக்கோவில்

Devi kanyakumari temple
Devi kanyakumari temple-kanyakumari

இத்திருக்கோவில் கன்னியாகுமரி புகைவண்டி நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ தூரத்திலும் , பேருந்து நிலையத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கடற்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவிலின் கிழக்கு வாசல் எப்பொழுதும் பூட்டியே இருக்கும். அன்னையின் மூக்குத்தி ஒளியினை கலங்கரை விளக்கின் ஒளி என்று எண்ணி , முன்னர் சில கப்பல்கள் தரை தட்டியுள்ளதால், இவ்வாசலை பூட்டியே வைத்துள்ளனர் என்பர். இவ்வாசலின் முன்னர் உள்ள பெரிய நீளமான கரையின் மீதிருந்து மக்கள் காலைக்கதிரவனின் வருகையினைப் பார்த்து ரசிப்பர். அன்னை கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.

வடக்கு வாசலிலுள்ள கோபுரம் வழியாக கோவிலுக்குள் நுழைகிறோம். கருவறையில் அன்னை கன்னியாகுமரி வலது கையில் ருத்ராட்ச மாலையுடன் தவக் கோலத்தில் காட்சி தருகிறார். அன்னையின் மூக்குத்தி ஒளி கண்ணைப் பறிக்கும். அன்னையின் பெயர் பகவதியம்மன் ஆகும். பாணாசுரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள் அன்னை பார்வதியின் உதவியை நாடினர். பாணாசுரனை ஒரு கன்னியால் தான் அழிக்க முடியும் என்று பிரம்மாவிடம் அவன் வரம் பெற்றிருந்தமையால் தேவியும், தேவர்களைக் காத்தல் வேண்டி கன்னி வடிவில் கன்னியாகுமரி வந்து தவம் செய்து கொண்டிருந்தாள். சுசீந்தரத்திலுள்ள இறைவன் தாணுமாலயன் தேவியை மணக்க விருப்பம் கொண்டார். இருவருக்கும் திருமண நேரம் ஒரு நள்ளிரவில் நடக்க நிச்சயிக்கப் பட்டது. திருமணநாளில் இறைவன் கன்னியகுமாரிக்குப் புறப்பட்டார். திருமணம் நடைபெற்றால் பாணாசுரனை அழிக்க இயலாது என்று எண்ணிய நாரதர் , திருமணத்தை நிறுத்த எண்ணி , வழியில் ஒரு சேவல் வடிவெடுத்து கூவினார். குறிப்பிட்ட வேலை தப்பிவிட்டது என்று எண்ணி , இறைவனும் சுசீந்திரம் திரும்பிவிட்டார். தேவி பகவதி அம்மனும் அதன் பின் கன்னியாகவே இருந்து , கடுந்தவம் புரிந்து பாணாசுரனை வதம் செய்து , தேவர்களைக் காப்பாற்றினார். அன்று முதல் தேவி பகவதி கன்னியாகவே இருந்து , கடுந்தவம் புரிந்து வருவதாகக் கூறுவர். எனவே தான் கன்னியாகுமரி என்ற பெயர் உண்டாயிற்று. கன்னியாகுமரி அன்னையைத் தரிசித்து விட்டு நாம் வெளியில் வருகிறோம்.

கன்னியாகுமரியில் நாம் காணவேண்டிய இடங்கள்

1. திரிவேணி சங்கமம்

வங்காளவிரிகுடா , அரபிக்கடல் , இந்துமகா சமுத்திரம் ஆகிய மூன்றும் சங்கமம்மாகும் இவ்விடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வோருக்கு , முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பர். பித்ருக்களின் இறந்த தேதி தெரியாதவர்கள் கூட , மகாளய அம்மாவாசை அன்று இங்கு நீராடி பிண்ட தர்ப்பணம் செய்கிறார்கள் . மேலும் ஆடி அம்மாவாசை , தை அம்மாவாசை அன்று இங்கு முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் ஸ்நானம் செய்து விட்டு , பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கூட்டம் அலைமோதும். பித்ருதோஷம் நீங்க இது அருமையான இடம் என்பர். மேலும் முக்கடல் சங்கமிக்கும் இவ்விடத்தில் தண்ணீருக்குள் நின்று கொண்டு, குரு தம் சீடர்களுக்கும் , தந்தை தம் மகனுக்கும் மந்திர உச்சாடனம் செய்து வைப்பதை நாம் அதிக அளவில் காணலாம்.

2. விவேகானந்தர் நினைவு மண்டபம்

Vivekananda Rock Memorial
Vivekananda Rock Memorial-kanyakumari

கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள ஒரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இவ்விடத்திற்கு சுவாமி விவேகானந்தர் அடிக்கடி வந்து தியானம் செய்ததாகக் கூறுவர். இவ்விடத்திற்கு நாம் படகில் தான் செல்ல வேண்டும் . அலைமோதும் கடலில் நாம் பயணம் செய்வது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். நாமும் இவ்விடத்திற்குச் சென்று சிறிது நேரம் தியானம் செய்து விட்டு வரலாம்.

3. திருவள்ளுவர் சிலை

thiruvallur-statue
kanyakumari-thiruvallur-statue

திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களை நினைவுப்படுத்தும் வகையில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒரு பாறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

4. காந்தி நினைவுமண்டபம்

Gandhi Memorial kanyakumari
Gandhi Memorial kanyakumari

முக்கடல் சங்கமிக்கும் இடத்திற்கருகில் , இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது. காந்தியின் அஸ்திக்கலசம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 2 ந் தேதி சூரியஒளி அதன் மேல் விழுகிறது. அனைவரும் இதனைக் கண்டுகளிக்கலாம் . இதற்கருகில் காமராசர் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில்

இத்திருக்கோவில் கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் 13 கி.மீ தூரத்திலும் , நாகர்கோவிலில் இருந்து 6 கி.மீ தூரத்திலும் உள்ளது.
தேரோடும் நான்கு பெரிய வீதிகளும் , அகன்ற தெப்பக்குளமும் அதன் நடுவிலுள்ள மண்டபமும் நம்மை வரவேற்கின்றன. கிழக்கு வாயிலிலுள்ள 134 அடி உயரமுள்ள ராஜகோபுரம் சுதை வேலைப்பாடுகள் நிறைந்தது. முகப்பு மண்டபத்தையும் 24 அடி உயரமுள்ள வாயிற் கதவையும் கடந்து சென்றால் , நம்மை முதலில் வரவேற்பது தவக்கோலத்திலுள்ள முப்பெருந்தேவியர் ஆவர். ஊஞ்சல் மண்டபத்திலுள்ள பெருந்தூண்களிலுள்ள சிலைகள் உயிர்த்துடிப்புடன் விளங்குகின்றன.
கிழக்குப் பிரகாரத்தில் முதலில் நாம் வணங்குவது தென்திசை நோக்கி அமர்ந்துள்ள தட்சணாமூர்த்தியாகும். அடுத்துள்ள வசந்த மண்டபத்தில் , ஒற்றைக்கல் மேடையைக் காண்கிறோம். வசந்த உற்சவத்தின் போது இம்மேடையைச் சுற்றிலும் நீரால் நிரப்பி இம்மேடையில் அம்மையப்பனை கொலு வீற்றிருக்க செய்வர். இம்மேடையின் மேற்கூரையில் நவக்கிரகங்களும் , பன்னிரண்டு ராசிகளும் அமைந்து உள்ளன. இவ்வமைப்பினை வேறு கோவில்களில் காணமுடியாது. இம்மேடையின் பின்புறம் கிழக்கு நோக்கி , வல்லபவிநாயகர் பெரிய உருவில் அமர்ந்துள்ளார். இவரைத் தரிசித்த பின் தெற்குப் பிரகாரம் செல்கிறோம்.

இத்தெற்குப் பிரகாரமே , இராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு அடுத்து அமைந்துள்ள மிகப்பெரிய பிரகாரம் ஆகும். இப்பிரகாரத்தின் தூண்களில், விளக்கேந்திய பாவைகளும், யாளிகளும் செதுக்கப்பட்டுள்ளன. இப்பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் கங்காத நாதர் கோவிலும் , கைலாசநாதர் கோவிலும் உள்ளன. இங்கு காணப்படும் கல்வெட்டுகள் கி.பி 5ம் நூற்றாண்டாய்ச் சேர்ந்தது என்று கூறுவர். மேற்குப் பிரகாரத்தில் சாஸ்தா ஐயப்பன் கோவிலையும் , இப்பிரகாரத்தின் இறுதியில் ஸ்ரீராமர், சீதை அமர்ந்துள்ள திருக்கோவிலையும் தரிசிக்கிறோம். இக்கோவிலின் வாசலில் இலட்சுமணனும் , அனுமனும் வணங்கி நிற்கின்றனர்.  வடக்குப் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் குமரனின் கோவிலும் , அடுத்து ஜயந்தீஸ்வரர் கோவிலும் உள்ளது. இக்கோவிலை பஞ்ச பாண்டவர்கள் வணங்கியுள்ளதால் , பஞ்சபாண்டவர் கோவில் என்பர். வடக்கு வாயிலில் கால பைரவர் சந்நிதி உள்ளது. இப்பிரகாரத்தில் அமைந்துள்ள அலங்கார மண்டபத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 25 சிறு தூண்களும் இது போல் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 33 சிறு தூண்கள் கொண்ட இருவேறு தூண்களும் உள்ளன. இவற்றைத் தட்டினால் சப்தஸ்வரங்களைக் கேட்கலாம். இவை சிற்பக் கலைக்கோர் சிகரமாக விளங்குகின்றன. இம்மண்டபத்தின் அருகில் அறம் வளர்த்த நாயகியின் கோவில் உள்ளது. இவருக்கும் இறைவனுக்கும் மாசிமகத்தன்று திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

அனுமன்

வடக்குப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் சீதா ராமனை நோக்கி பணிவுடன் கை கூப்பி நிற்கும் அனுமானைக் காண்கிறோம். 18 அடி உயரமுள்ள இப்பேருருவம், அசோகவனத்தில் சீதாப்பிராட்டிக்கு அனுமன் காட்டிய வீசுவரூபக் காட்சி என்பர். இவரை நாளெல்லாம் வணங்கிக் கொண்டே இருக்கலாம் என்பர் பக்தர்கள். இவருக்கு வடை மலையும் , வெண்ணை காப்பும் செய்து பக்தர்கள் தங்களுடைய வேண்டுதலை தெரிவிக்கிறார்கள் . இவருக்குப் பின்னாளிலுள்ள சித்திர சபையில் கிருஷ்ணர், கங்காளநாதர், ஊர்த்துவதாண்டவர், பதஞ்சலி முனிவர், புலிக்கால் முனிவர் , ஆனந்த நடனம் புரியும் அம்மை , அனுமன் ஆகியோரின் அற்புத சிலைகள் அழகுக்கு அழகு சேர்கின்றன.

கொன்றையடி நாதர்

சித்திர சபையைக் கண்டுகளித்த பின் , கிழக்கு உட்பிரகாரத்தில் நாம் மிகப் பெரிய நந்தியையும், கருடாழ்வாரையும் இருவருக்கும் நடுவில் கொன்றையடி நாதரையும் காணலாம். 12 1/2 அடி உயரமுள்ள வெள்ளை மாக்காளை இறைவனின் கற்பக்கிரகத்தை நோக்கி அமர்ந்துள்ளது. தாணு, மால் , அயன் மூவரும் லிங்க வடிவில் அமர்ந்துள்ளனர். இவரே கொன்றையடி நாதர் எனப்படுகிறார். தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் உள்ளனர். மும்மூர்த்திகளையும் சிறு குழந்தைகளாக மாற்றிய கற்புக்கரசி அனுசியாவின் வேண்டுதல்படி மும்மூர்த்திகளும் இங்கு லிங்க வடிவில் இருப்பதாகக் கூறுவர். அபிஷேகம் நடக்கும் போது மட்டுமே இவர்களைத் தரிசிக்க முடியும். மற்ற வேளைகளில் தங்கக் கவசத்தால் மூடப்பட்டிருக்கும் இக்கொன்றை மரம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

கருடாழ்வார் சந்நிதி

கொன்றையடி நாதர் சந்நிதிக்கு அடுத்து 6 1/2 அடி உயரமுள்ள கருடாழ்வார் சந்நிதி உள்ளது. இவர் விஷ்ணுவின் கற்பக்கிரகத்தை நோக்கி கைக்கூப்பி நிற்கிறார். இச்சிலை வழுவழுப்பான கல்லால் ஆனது. இம்மண்டபத்தில் திருமலைநாயக்கர் சிலையும் ,வேறு மூன்று சிலைகளும் உள்ளன. ஒரு சிலையின் காதி லுள்ள துவாரம் வழியாக ஒரு சிறு குச்சியை செலுத்தினால் அது மறு காது வழியாகவும் , நாசித் துவாரம் வழியாகவும் வந்து விடும் அளவுக்கு எல்லாச் சிலைகளும் உயரிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன. விரல் நகங்கள் ஆடை அணிகள் கூட அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.

கொடிமண்டபம்

கொன்றையடிக்கு எதிரில் உள்ள கொடிமண்டபத்தில் திருமால் சிவன் கருவறைகளுக்கு எதிரில் இரெண்டு கொடிமரங்கள் உள்ளன. இங்குள்ள விநாயகரின் பெயர் சாட்சி விநாயகர் ஆகும். அக்காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்தார் எனில், கொதிக்கும் நெய்யில் தனது கையை முக்கி நிரூபித்தல் வேண்டும் . இதற்கு சாட்சியாக இருப்பவரே இவ்விநாயகர் ஆவார். 19 ம் நூற்றாண்டில் தான் இக்கொடிய பழக்கத்தை நிறுத்தியவர் திருவிதாங்கூர் மன்னர் சுவாதித்திருநாள் மகாராஜா ஆகும்.

செண்பகராமன் மண்டபம்

கொடிமண்டபத்தை அடுத்துள்ள இம்மண்டபத்தில் இராமாயண , மகாபாரத நிகழ்வுகள் தூண்களிலும் , சுவர்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இராமன் பக்கத்தில் நின்று பார்த்தால் வாலி நிற்பது தெரிவதும் , வாலி பக்கத்தில் நின்று பார்த்தால் இராமன் நிற்பது தெரியாததும், சிற்பியின் கலைத்திறனைக் காட்டுகிறது. வாலி, சுக்ரீவன் யுத்தமும் ஒரு தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. அக்கால சிற்பிகளின் கலைத்திறனைக் காட்டும் கலைக்கூடமாக இம்மண்டபம் விளங்குகிறது.

தாணுமாலயன் மூலஸ்தானம்

அடுத்து உள்ள அர்த்த மண்டபத்திற்குள் சென்று கருவறையில் இருக்கும் தாணுமாலயன் ஸ்வாமியைத் தரிசிக்கிறோம். அர்த்த மண்டபம் முழுவதும் தீபங்கள் நிறைந்து விளங்குகின்றன. சுவாமி லிங்கவடிவில் உள்ளார். இந்த லிங்கத்தின் அடிப்பாகம் பிரம்மா, நடுப்பாகம் விஷ்ணு , மேலுள்ள பாணம் சிவன் இவ்வாறு மும்மூர்த்திகளும் ஓர் உருவில் காட்சி தருகின்றனர். அத்திரி முனிவரின் மனைவி அனுசியாவின் கற்பினைச் சோதிக்க மும்மூர்த்திகளும் முனிவர் இல்லாத நேரத்தில் அனுசூயாவிடம் வந்து பிச்சை கேட்க , அனுசூயாவும் பிச்சையிட வந்த போது , ஆடையணிந்தவரிடமிருந்து உணவு ஏற்பதில்லை என்றனர் மூவரும்.

அனுசூயாவும் தன் கற்பின் திறத்தால் , மூவரையும் மூன்று குழந்தைகளாக்கி பின் ஆடையில்லாமல் வந்து உணவு அளித்தார். மும்மூர்த்திகளும் குழந்தைகளாகவே இங்கேயே தங்கிவிட , முப்பெருந்தேவியரும் இங்கு வந்து நடந்ததை அறிந்து தங்கள் கணவர்களைத் திருப்பிக் கேட்டனர் . அனுசூயாவும் மூன்று குழந்தைகளையும் மும்மூர்த்திகளாக்கி அனுப்பி வைத்தாள் . அவர்கள் மறைந்ததும் , அவ்விடத்தில் மூன்று லிங்கங்கள் எழும்பின. அவையே கொன்றையடி நாதர் ஆவர். மூவரும் ஓர் உருவில் காட்சி கொடுத்து ஒரு லிங்கம் ஆயினர். அதுவே தாணுமாலயன் சுவாமி ஆவார் என்பர். எனவே மும்மூர்த்திகளையும் தனித்தனி லிங்கமாகக் கொன்றையடியிலும் , ஒரு லிங்க வடிவில் தாணுமாலயன் ஸ்வாமியாகவும் நாம் வழிபடலாம். கருவறையின் இடப்புறம் நடராஜர் எழுந்தருளியுள்ளார். அருகிலுள்ள கருவறையில் 7 1/2 அடி உயரமுள்ள திருவேங்கடநாதனாக விஷ்ணு காட்சி தருகிறார். இவருக்கு அருகில் ஸ்ரீதேவி , பூதேவியுடன் விஷ்ணு , வேத வியாசர், நாராயணர் சிலைகளை நாம் தரிசிக்கலாம். கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் பல தெய்வ உருவங்களையும் , இந்திர விநாயகர் கோவில் சுவர்களில் பல அழகிய சிற்பங்களையும் , ஓவியங்களையும் நாம் காணலாம்.

இந்திரன் சாபவிமோசனம் பெற்ற தலம்

கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது தகாத ஆசை கொண்ட இந்திரன் , முனிவரது சாபத்தால் உடல் முழுவதும் கண்களாகி துயருற்றான். பல தலங்களில் தவம் செய்தும் , பழி தீரவில்லை . இந்த ஞான ஆரண்யத்திற்கு வந்து , தாணுமாலயனை வணங்கியதும் அவன் பெற்ற சாபம் நீங்கி , நலம் பெற்றான் மகிழ்வுற்ற இந்திரன் . இங்கு மும்மூர்த்திகளுக்கும் கோவில் எழுப்பினான். எனவே இவ்விடம் சுசீந்திரம் எனப் பெயர் பெற்றது. இந்திரன் தினசரி இங்கு வந்து அர்த்தசாமப் பூஜை செய்வதாக ஐதீகம் . அதிகாலையில் தாணுமாலயன் கருவறையைத் திறந்தால் பூக்கள் சிதறிக் கிடக்கும்,என்றும் பூஜை செய்த அடையாளம் தெரியும் என்றும் கூறுவர். எனவே தான் , இரவில் கருவறையைப் பூட்டிச் சென்ற குருக்கள் , மறுநாள் காலையில் கருவறையைத் திறப்பதில்லை என்பர். மும்மூர்த்திகளும் தனித்தனி லிங்கங்களாகவும் , ஒரே லிங்கமாக ஓர் உருவிலும் விளங்குவதாலும் , சிவன் சந்நிதி விஷ்ணு சந்நிதி இரண்டும் ஓரிடத்தில் அமைந்துள்ளதாலும் , இக்கோவில் சைவ ,வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மார்கழி சித்திரை மாதங்களில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. சித்திரை மாதம் பத்தாம் நாள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. இந்நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி வழிபடுவர்.

திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோவில்

Thirupathisaram thiruvalmarpan temple
Thirupathisaram thiruvalmarpan temple

திருப்பதிசாரம் என்றும் திருவண் பரிசாரம் என்றும் அழைக்கப்படும். இத்தலம் , நாகர்கோவிலில்லிருந்து வடக்கில் 21/2 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாளின் பெயர் திருக்குறளப்பன், திருவாழ்மார்பன் என்பன. தாயார் பெயர் கமலவல்லி நாச்சியார் ஆகும். பெருமாள் வீற்றிருந்த திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம் . கோவிலின் எதிரில் லட்சுமி தீர்த்தம் என்ற அழகிய புஷ்கரனி உள்ளது. இவ்வூரின் உடையநங்கை என்ற பெண் விஷ்ணுவின் பக்தையாகி, ஆழ்வார் திருநகரி என்று அழைக்கப்படும் குருகூரில் காரி என்ற விஷ்ணு பக்தருக்கு பத்தினியாகி , இத்தலத்தில் 41 நாள் விரதமிருந்து பெற்ற மகனே நம்மாழ்வார் ஆகும்.

நம்மாழ்வார் வைகாசி விசாகத்தன்று அவதரித்து எவ்வித அசைவும் இன்றி ஊன் உரக்கம்மின்றி இருந்ததால் , குருகூரில் ஆதிநாதன் சந்நிதியில் தனிமையில் விடப்பட்டார். இக்குழந்தை தவழ்ந்து சென்று புளியமரத்துப் பொந்தில் புகுந்து, யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் 16 ஆண்டுகள் தவமிருக்க , மதுரகவியாழ்வார் என்பவர் இவரிடம் வந்து உபதேசம் செய்யும்படி பிரார்த்திக்க , இவர் அருளியதே ஸ்தலபுராணம் ஆகும். திருப்பதிசாரம் மூலவர் திருவாழ்மார்பனின் வலப்பக்க சந்நிதியில் இராமர், சீதை , அகத்தியர், ஆஞ்சநேயர், விபீஷணர், குலசேகர ஆழ்வார் ஆகியோர் உள்ளனர். அனுமன் பிரார்தனைக்கிணங்க , அகஸ்தியர் இராமாயணம் அருளியதாகக் கூறுவர். இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த மகாலட்சுமியைத் தேடி பெருமாள் வந்ததாகவும், அதனால் மகிழ்ச்சியுற்ற மகாலட்சுமி பெருமாளின் மார்பில் நித்யவாசம் செய்வதாகவும் , எனவே இப்பெருமானுக்கு திருவாழ்மார்பன் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில்

Adhikesava Perumal Temple
Adhikesava Perumal Temple

இத்தலத்திற்கு நேரடியாக பஸ் மற்றும் ரயில் வசதிகள் கிடையாது. இங்கு எவ்வித வசதியும் கிடையாது. நாகர்கோவிலுக்கும் , திருவனந்தபுரத்திற்கும் இடையில் உள்ளது. இரண்டு பஸ்கள் மாறிச் செல்ல வேண்டும். இத்தலம் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இத்தலத்து பெருமாள் பெயர் ஆதிகேசவப் பெருமாள். தாயார் பெயர் மரகதவல்லி நாச்சியார் ஆகும். மேற்கு நோக்கிய திருமுகமண்டலம் . திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் போன்றே இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு பெருமாளைச் சேவிக்க மூன்று வாசல்களும், பெரிய பிரகாரங்களும் உள்ளன. மாலை வேளைகளில் சூரிய வெளிச்சம் இயற்கையாகவே பெருமாள் திருமுகத்தில் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

ஆதிகேசி என்ற அசுரன் தேவர்களை இம்சித்து வந்தான்.தேவர்கள் பகவானிடம் முறையிட , பகவான் கேசியுடன் மல்யுத்தம் செய்து கேசியை கீழே தள்ளி , மேலே படுத்துக் கொண்டார் . கேசியின் மனைவி ஆசுரி என்பவள் கங்கையைப் பிரார்த்திக்க, கங்கை தாமிரபரணியுடன் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடி வந்தது. அப்பொழுது பகவான் உத்தரவுப்படி பூமிதேவி பகவான் இருக்குமிடத்தை மலை போல் மேடாக்க , கங்கையும் , தாமிரபரணியும் பகவானை வணங்கி , மாலை சமர்பித்தார் போல் இரெண்டாகப் பிரிந்து வட்டமாகச் சென்றபடியால் இத்தலம் திருவட்டாறு எனப் பெயர் பெற்றது. திருவட்டாறும் தாமிரபரணியும் இவ்வூரைச் சுற்றி வட்டமாகச் செல்கின்றன. ஆதிகேசியை பகவான் நிக்கிரகம் செய்தபடியால் , பகவானுக்கு ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயர் உண்டாயிற்று.  இப்பெருமானின் நாபிக்கமலத்தில் பிரம்மா கிடையாது. இப்போதுள்ள பிரம்மா உண்டாவதற்கு முன் ஏற்பட்ட தலம் என்றும் திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமிக்கு முந்தினவர் என்றும் கூறுவர். மிகப்பெரிய பெருமாள் பள்ளி கொண்டிருப்பதை நாம் அவசியம் கண்டு தரிசிக்க வேண்டும்.

இதர சுற்றுலாத் தலங்கள்

1. பத்மநாபபுரம் அரண்மனை

நாகர்கோவிலில்லிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் , தக்கலை என்ற நகருக்கு அருகில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அரண்மனை உள்ளது. திருவிதாங்கூர் மன்னர்கள் கட்டிய இந்த அரண்மனை முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்டதாகும். பழங்கால மன்னர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையை , படம் பிடித்து காட்டும் வழியில் இந்த அரண்மனை அமைந்துள்ளது.

2. திற்பரப்பு அருவி

பத்மநாபுரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் இந்த அருவி அமைந்துள்ளது. கோடைகாலத்திலும் , இவ்வருவியில் தண்ணீர் சிறிதளவாவது கொட்டிக் கொண்டிருக்கும். இங்கு சிறுவர்கள் குளிக்க வசதியாக சிறிய நீச்சல் குளம் உள்ளது. இயற்கையான சூழ்நிலையில் இவ்வருவி அமைந்துள்ளது.

3. மாத்தூர் தொட்டிப்பாலம்

திருவட்டாரிலிருந்து மாத்தூர் என்ற கிராமத்திற்குச் செல்லும் பாதையில் தொட்டிப்பாலம் அமைந்துள்ளது. ஆற்றிற்கு மேற்பரப்பில் , விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் அமைந்துள்ளது விசேஷமாகும். ஆசியாவிலேயே இது இரெண்டாவது நீளமான பாலம் என்பர். 1240 அடி நீளமும் 103 அடி உயரமும் கொண்ட இந்த பாலம் 29 பில்லர்களை உடையது. இதன் மீது நின்று பார்த்தால் , கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பசேலென காட்சி தரும்.

இவை தவிர நாகர்கோவிலில் உள்ள நாகராசா கோவில் பாம்பையே மூலவராகக் கொண்ட கோவிலாகும். ராகு, கேது பெயர்ச்சி நாட்களில் இக்கோவிலில் , பக்தர் கூட்டம் அலைமோதும். நாகர்கோவில் அருகிலிலுள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் மிகப் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.  மேற்சொன்ன திருக்கோவில்களுக்கும் , குழந்தைகள் பெரிதும் விரும்பும் பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கும் வருடம் ஒருமுறை சென்று புத்துணர்ச்சி பெற்று வரலாம். இம்மாவட்ட தலைநகர் நாகர்கோவிலில் தங்குவதற்கு அனைத்து வசதிகளும் உள்ளன. நாகர்கோவிலில் தங்கியிருந்து மேற்கண்ட தலங்களுக்கு சென்று வரலாம்.

Description

Kanyakumari is surrounded by water on three sides. Spiritual edifices and heartwarming tourist sites are full of popularity in the district. Devi Kanniyakumari Amman, Vivekananda Rock Memorial, Thiruvalluvar Statue, Gandhi Memorial, Susendram Thanumalayan Temple and Thirupathisaram Thiruvalmarpan Temple are the best places to visit in kanayakumari.

40 COMMENTS

 1. I am just writing to make you be aware of what a brilliant encounter my friend’s daughter undergone visiting your web site. She came to find a good number of details, most notably how it is like to possess a great teaching nature to let other people very easily know just exactly various specialized topics. You actually surpassed my expected results. Many thanks for showing the powerful, healthy, revealing and in addition unique guidance on your topic to Kate.

 2. I and my pals happened to be going through the good things on your site while then developed a horrible suspicion I never expressed respect to the website owner for them. Those men appeared to be certainly stimulated to read through all of them and have in effect absolutely been taking advantage of these things. I appreciate you for actually being simply considerate and then for deciding on these kinds of smart subject matter millions of individuals are really needing to be informed on. Our sincere apologies for not saying thanks to sooner.

 3. I simply wished to appreciate you once again. I’m not certain the things that I would have used in the absence of the actual tactics shared by you regarding this field. It was actually a very distressing case in my view, however , seeing the very skilled tactic you handled the issue forced me to weep over contentment. Extremely grateful for your service and as well , believe you find out what a great job you’re carrying out training people thru a site. Probably you have never got to know any of us.

 4. I really wanted to type a small remark so as to thank you for these precious ideas you are showing on this website. My rather long internet research has at the end been compensated with pleasant knowledge to write about with my two friends. I ‘d point out that many of us website visitors actually are quite endowed to exist in a useful community with very many marvellous people with beneficial techniques. I feel quite fortunate to have seen your web pages and look forward to really more brilliant times reading here. Thanks again for everything.

 5. I wish to voice my admiration for your kindness for men and women who must have guidance on this one theme. Your personal commitment to passing the message all through was quite productive and have usually empowered employees just like me to arrive at their endeavors. This invaluable key points means a great deal to me and much more to my office colleagues. Regards; from each one of us.

 6. I’m also writing to make you be aware of what a excellent discovery my cousin’s princess obtained browsing your web page. She mastered so many details, which included what it’s like to possess an excellent coaching character to make many more effortlessly comprehend several impossible topics. You really did more than our desires. Thanks for delivering the priceless, trustworthy, informative and as well as unique thoughts on that topic to Ethel.

 7. Thank you a lot for providing individuals with remarkably wonderful chance to check tips from this web site. It really is so beneficial and as well , packed with amusement for me personally and my office mates to visit your web site minimum thrice in 7 days to learn the fresh guides you have got. Of course, I’m certainly amazed with your magnificent guidelines served by you. Some 2 points in this posting are essentially the simplest we’ve ever had.

 8. Thank you for your whole effort on this web site. Gloria really loves setting aside time for internet research and it’s simple to grasp why. We all hear all relating to the lively way you produce rewarding solutions by means of this blog and in addition cause response from the others on this theme so our girl is certainly starting to learn a great deal. Have fun with the rest of the year. You have been doing a powerful job.

 9. I would like to express thanks to the writer just for rescuing me from this type of setting. After looking through the online world and seeing tips which are not beneficial, I assumed my entire life was gone. Existing without the solutions to the problems you’ve solved as a result of the website is a serious case, as well as the ones that would have in a wrong way affected my entire career if I hadn’t encountered your web blog. That understanding and kindness in handling every part was vital. I am not sure what I would have done if I had not encountered such a subject like this. I can at this point look forward to my future. Thanks so much for the skilled and sensible help. I will not hesitate to recommend your web sites to any individual who should receive guide about this area.

 10. I needed to post you one little bit of remark to be able to give many thanks the moment again for those splendid solutions you’ve provided above. It’s simply unbelievably open-handed of you to deliver extensively exactly what many of us would’ve made available as an e book in order to make some money on their own, primarily seeing that you could possibly have done it if you desired. The things in addition served to become fantastic way to comprehend other people have a similar fervor really like mine to know the truth more and more with reference to this condition. I’m sure there are numerous more enjoyable situations in the future for individuals who looked at your blog post.

 11. I intended to compose you a little observation to give many thanks the moment again with your stunning concepts you’ve shared on this site. It was strangely open-handed of people like you to offer openly all that a number of us might have supplied as an electronic book in making some dough for themselves, and in particular now that you could possibly have done it if you considered necessary. Those concepts likewise worked like a good way to understand that the rest have the same passion like my personal own to find out whole lot more when it comes to this problem. I am certain there are lots of more fun periods in the future for folks who look over your website.

 12. I enjoy you because of your own efforts on this website. My aunt enjoys conducting investigations and it’s really easy to understand why. Most of us know all concerning the compelling way you present advantageous steps on your website and boost participation from some others on this area plus our favorite girl is without question becoming educated a lot. Have fun with the rest of the year. You’re the one conducting a glorious job.

 13. I want to show some thanks to the writer for rescuing me from this type of situation. After looking throughout the internet and finding concepts which are not productive, I assumed my entire life was well over. Living minus the approaches to the problems you’ve resolved through your main post is a crucial case, and the kind that would have in a wrong way affected my career if I hadn’t encountered your website. Your personal understanding and kindness in handling almost everything was precious. I’m not sure what I would’ve done if I had not come upon such a subject like this. I can at this point relish my future. Thank you very much for your specialized and amazing help. I will not think twice to endorse your web page to any person who would need guidelines about this subject matter.

 14. I simply had to thank you so much once more. I’m not certain the things I could possibly have sorted out in the absence of these creative ideas shared by you relating to that question. It has been a real hard dilemma in my view, however , being able to view your expert form you handled the issue made me to cry for joy. I am happier for this guidance and believe you recognize what a great job you were accomplishing teaching the others by way of a blog. I’m certain you haven’t come across any of us.

 15. I would like to show my passion for your generosity in support of individuals who actually need assistance with this one matter. Your very own dedication to getting the solution around appears to be surprisingly effective and has usually helped guys like me to arrive at their objectives. Your warm and friendly help and advice denotes so much to me and further more to my office workers. Warm regards; from all of us.

 16. I am glad for writing to let you know of the wonderful experience my wife’s daughter experienced going through the blog. She came to understand such a lot of issues, which included what it is like to possess a marvelous teaching mindset to have most people with ease completely grasp some extremely tough subject matter. You undoubtedly surpassed people’s desires. Many thanks for presenting these great, safe, educational and as well as easy tips on this topic to Sandra.

 17. Thank you for your entire efforts on this site. Kate really likes getting into investigations and it’s obvious why. We all learn all concerning the compelling way you convey priceless tips through the website and invigorate response from other ones on this issue while my daughter is actually studying a whole lot. Enjoy the rest of the year. You are conducting a stunning job.

 18. I want to show thanks to the writer just for bailing me out of this trouble. Right after researching through the the net and obtaining opinions which were not helpful, I figured my life was well over. Living minus the answers to the difficulties you’ve sorted out by means of your main short article is a critical case, as well as ones that might have negatively affected my entire career if I had not noticed your web site. Your own personal competence and kindness in handling a lot of things was vital. I don’t know what I would’ve done if I hadn’t come upon such a step like this. I can at this point look ahead to my future. Thanks a lot very much for this professional and results-oriented guide. I will not be reluctant to propose the blog to any individual who should have assistance about this area.

 19. My spouse and i have been now fortunate when Ervin managed to deal with his investigation from the ideas he got out of your web site. It is now and again perplexing just to choose to be releasing tips which some other people may have been selling. And we also recognize we’ve got the blog owner to thank for that. All the explanations you have made, the easy site menu, the friendships your site help engender – it is everything wonderful, and it is helping our son in addition to the family reason why this situation is enjoyable, which is certainly exceedingly vital. Thank you for the whole lot!

 20. Thank you so much for providing individuals with an extraordinarily spectacular opportunity to read in detail from this web site. It is often very terrific and as well , packed with a good time for me personally and my office friends to visit the blog really 3 times weekly to read the latest issues you have. Not to mention, I’m just always amazed for the remarkable strategies you give. Certain 2 tips on this page are essentially the best I have had.

 21. I have to express my thanks to the writer just for rescuing me from such a issue. Just after looking out through the online world and obtaining notions that were not beneficial, I assumed my entire life was gone. Existing without the presence of strategies to the issues you’ve fixed all through the site is a crucial case, as well as those which may have in a wrong way affected my career if I had not discovered your blog. Your personal talents and kindness in controlling all the things was precious. I am not sure what I would have done if I hadn’t come upon such a step like this. It’s possible to at this moment look forward to my future. Thanks a lot very much for your high quality and amazing guide. I will not be reluctant to propose your web sites to anyone who needs and wants counselling on this subject.

 22. I truly wanted to write down a quick note so as to express gratitude to you for all of the magnificent guides you are showing on this site. My extended internet research has at the end been recognized with brilliant points to talk about with my visitors. I ‘d express that many of us readers actually are extremely fortunate to live in a notable network with very many special people with interesting suggestions. I feel really lucky to have come across your entire weblog and look forward to so many more cool minutes reading here. Thank you once more for all the details.

 23. I want to show my thanks to this writer just for bailing me out of this matter. Right after checking throughout the world wide web and getting ideas that were not powerful, I was thinking my life was gone. Existing without the presence of answers to the problems you have fixed by way of your main write-up is a serious case, as well as the kind that might have adversely damaged my entire career if I hadn’t noticed the blog. That training and kindness in touching almost everything was useful. I don’t know what I would have done if I hadn’t encountered such a step like this. I am able to now look ahead to my future. Thank you so much for the expert and sensible help. I won’t be reluctant to recommend your blog to any person who should receive counselling about this area.

 24. Thanks so much for giving everyone a very remarkable opportunity to read from this site. It can be very superb and also jam-packed with a great time for me and my office peers to search your web site at least three times every week to find out the newest things you have got. And definitely, we’re always fascinated considering the fabulous guidelines you serve. Some 1 tips in this post are particularly the most impressive we’ve had.

 25. I simply wanted to say thanks all over again. I do not know what I might have tried in the absence of the entire hints shared by you relating to my area. It became a real difficult problem in my opinion, but witnessing the very well-written technique you resolved that took me to weep with contentment. I’m just happier for your assistance and then sincerely hope you know what an amazing job your are doing educating the mediocre ones thru your webblog. Most likely you haven’t encountered all of us.

 26. I want to show some thanks to you just for bailing me out of such a incident. Because of looking through the the web and seeing principles which were not beneficial, I believed my life was done. Existing minus the approaches to the issues you have solved by way of your guideline is a serious case, as well as the ones which might have negatively affected my entire career if I hadn’t encountered the website. Your actual skills and kindness in dealing with all the details was important. I am not sure what I would’ve done if I had not come across such a thing like this. I’m able to at this point look forward to my future. Thanks for your time very much for your reliable and effective guide. I will not hesitate to recommend the sites to anyone who ought to have guidelines about this issue.

 27. I precisely had to appreciate you once again. I’m not certain the things that I would have undertaken without the tips shared by you on that industry. It had been an absolute scary condition in my circumstances, however , finding out the very skilled manner you resolved the issue took me to jump with joy. I am just happier for the help and even expect you really know what a powerful job you have been doing teaching the others all through a blog. Probably you have never got to know all of us.

 28. Thanks a lot for giving everyone such a spectacular opportunity to read from this site. It is usually so terrific and stuffed with amusement for me and my office peers to visit the blog minimum 3 times in 7 days to study the latest secrets you will have. And indeed, I’m also certainly pleased with all the fantastic suggestions you serve. Some 2 areas on this page are indeed the most suitable we have all ever had.

 29. I and also my pals came reviewing the great suggestions on your web page and then instantly developed a horrible feeling I never thanked the web blog owner for those techniques. All the boys happened to be for this reason passionate to read through all of them and have in effect certainly been using those things. Thanks for truly being considerably helpful and then for picking certain marvelous subject matter most people are really wanting to be aware of. My personal honest regret for not expressing appreciation to sooner.

 30. My husband and i got very glad that Louis managed to carry out his reports through your precious recommendations he had through your weblog. It’s not at all simplistic to simply always be making a gift of tricks which others could have been trying to sell. And now we take into account we need you to appreciate for this. The main explanations you made, the easy blog navigation, the friendships you can make it easier to foster – it’s everything sensational, and it’s letting our son and our family do think this matter is thrilling, which is certainly really essential. Thanks for the whole lot!

 31. My wife and i ended up being now comfortable Louis could finish off his reports from the precious recommendations he grabbed from your web pages. It is now and again perplexing just to find yourself handing out solutions which many others have been trying to sell. Therefore we acknowledge we need the writer to give thanks to for that. The specific explanations you have made, the simple website menu, the relationships you can give support to promote – it’s all incredible, and it is helping our son in addition to us do think that content is thrilling, which is certainly extremely mandatory. Many thanks for everything!

 32. I am writing to let you know what a cool discovery my friend’s girl obtained going through the blog. She picked up a wide variety of details, with the inclusion of how it is like to possess a very effective teaching character to let certain people very easily know just exactly selected complicated subject areas. You really surpassed our own expectations. Many thanks for supplying such informative, healthy, informative and as well as easy tips about this topic to Sandra.

 33. I happen to be writing to make you be aware of what a wonderful discovery our girl gained browsing your blog. She learned a wide variety of issues, which included what it’s like to have an excellent coaching nature to get other folks without difficulty comprehend certain tortuous issues. You actually exceeded our expected results. Thanks for giving the practical, trustworthy, edifying and also cool tips on that topic to Ethel.

 34. I wanted to type a remark in order to express gratitude to you for some of the marvelous tips and tricks you are placing here. My rather long internet look up has at the end been honored with pleasant ideas to share with my colleagues. I would tell you that many of us visitors are undoubtedly lucky to be in a wonderful place with very many perfect individuals with beneficial basics. I feel pretty blessed to have used the web page and look forward to really more enjoyable times reading here. Thanks a lot once again for a lot of things.

 35. I am also writing to let you know what a fantastic discovery my cousin’s princess went through browsing your web page. She discovered several details, not to mention what it is like to have a very effective teaching nature to let the mediocre ones really easily fully grasp specific extremely tough subject matter. You really surpassed her expected results. Thanks for coming up with the insightful, trustworthy, educational and fun guidance on the topic to Ethel.

 36. Thanks so much for giving everyone an extraordinarily spectacular possiblity to check tips from this blog. It is always very great plus full of amusement for me personally and my office colleagues to visit your site more than 3 times weekly to study the new secrets you have got. And lastly, I’m so at all times amazed with all the magnificent tricks you give. Some 2 tips in this posting are unequivocally the most beneficial I’ve had.

 37. I am also commenting to let you be aware of of the fantastic encounter my friend’s girl went through visiting your web site. She came to understand plenty of details, including how it is like to possess an excellent coaching mood to get the rest easily have an understanding of a variety of very confusing topics. You undoubtedly exceeded our desires. I appreciate you for producing those good, safe, revealing and fun guidance on your topic to Sandra.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here