முன்னுரை

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்னும் நவக்கிரகங்களும் மனிதப் பிறவிகளான நம்மை, நாம் முன் செய்த வினைக்கேற்ப, ஆட்டிப்படைக்கின்றன. இவர்கள் தேவர்களாக இருந்தாலும், இறைவன் கட்டளைப்படி நடக்க வேண்டியவர்களாவர். தனித்து இயங்கும் சுதந்திரம் இவர்களுக்கு இல்லை. சிவபெருமானின் ஆணைப்படியும்., கால தேவனின் துணைக் கொண்டும் அனைத்து ஜீவராசிகளுக்கும், அவரவர் வினைப்பயனை ஊட்டுவதற்காகவே இவர்கள் படைக்கப்பட்டுள்ளனர்.

முன்வினைப் பயனை அனுபவித்தே தீர வேண்டுமென்ற நியதி இருந்தாலும், அதை நிறைவேற்றி வைக்கும் பிரதிநிதிகளான இவர்களைப் பூசித்து வழிபட்டு, இவர்களுக்குரிய ஸ்தோத்திரங்களை மனமுருகி படித்து , இவர்கள் வீற்றிருக்கும் திருக்கோவில்களின் மூலவர்களான சிவனையும், சக்தியையும், பிரார்த்தித்தால் , தகுதிக்கேற்ப இவர்கள் நமது கஷ்டங்களை அகற்றுவர் அல்லது குறைத்து விடுவர் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இவ்வாறு நடப்பதை மக்கள் கண்கூடாகக் காண்பதால் , இவர்கள் அமர்ந்துள்ள தலங்களில் சில , கடந்த 50 ஆண்டுகளாக மிகவும் பிரசித்தி பெற்று மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. நம்பிக்கையே ஆன்மிகத்திற்கு அஸ்திவாரம் என்பதால் , நாமும் நவக்கிரக ஸ்தலங்களுக்குச் சென்று பிரார்த்தித்து வருவோம்.

முதல் ஏழு கிரகங்களும் மேருமலையை வலமாகவும் , ராகு, கேது இருவரும் மேருமலையை இடமாகவும் சுற்றி வருகிறார்கள். உலகில் வாழும் உயிர்கள் செய்த புண்ணிய பாவங்களுக்கு உரிய பலா பலன்களை அவ்வுயிர்களுக்கு கொடுத்து வருகிறார்கள். இக்கோவில்கள் அனைத்தும் கும்பகோணத்தைச் சுற்றி 60 கி.மீ தூரத்திற்குள் அமைந்துள்ளன. எனவே கும்பகோணத்தில் தங்கி இருந்து 2 ,3 தினங்களில் அனைத்து கோவில்களையும் தரிசித்து வரலாம்.

சூரியன் – சூரியனார் கோவில்

suriyanar temple
suriyanar temple- mayiladuthurai

இத்தலம் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 12 கி.மீ தூரத்தில் உள்ள ஆடுதுறை சென்று அங்கிருந்து 3 கி.மீ தூரத்திலுள்ளது. இங்கு வழிபடச் செல்பவர்கள் முதலில் அருகிலுள்ள திருமங்கலக்குடி சென்று அங்குள்ள இறைவன் பிராணவரதேஸ்வரர் , மங்கள நாயகி அம்மை ஆகியோரை வழிபட்டு வர வேண்டும் என்பர். இவர் நவக்கிரகங்களின் தோஷத்தையே நீக்கியவர். இங்கு மங்கள விமானம் , மங்கள விநாயகர், மங்களாம்பிகை, மங்கள தீர்த்தம் , மங்கலக்குடி என ஐந்தும் மங்களம் என்பதால் , இது பஞ்சமங்கள ஷேத்திரம் என்பர். திருமால், காளி , சூரியன், பிரமன், மகரிஷி அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலம். அம்பாள் திருமணத்தடை நீக்குபவள் , மாங்கல்ய பலம் தருபவள் என்பர். இங்கிருந்து 1 கி.மீ தூரத்தில் சூரியனார் கோவில் உள்ளது.

சூரியனார் கோவிலில் பிரதான மூலஸ்தானத்தில் சூரியன் தேவியர் உஷா தேவி, பிரத்யுஷா தேவி ஆகியோருடன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இவருக்கு நேர் எதிரில் வியாழ குருவும் அவரது யானையும் உள்ளது. சூரியன் தனது குருவின் முன்னாள் உக்கிரம் தணிந்து அனைவருக்கும் அருள் புரிவதாகக் கூறுவர். இம்மண்டபத்தில் காசி விஸ்வநாதர், விஷாலாட்சியை தரிசிக்கிறோம். அடுத்து உள்ள சபாநாயகர் மண்டபத்தில் நடராசரையும் நவக்கிரக உற்சவமூர்த்திகளையும் தரிசிக்கிறோம்.

பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் கோள் தீர்த்த விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட சாபப்பிணியான கோள் தீர்த்த இவரை நாமும் வழிபட்டு பின்னர் அப்பிரதட்சணமாக வலம் வருகிறோம். சனி, புதன், செவ்வாய், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு எழுவர் சந்நிதிகளிலும் வணங்கி அடுத்துள்ள சண்டிகேஸ்வரரை வணங்குகிறோம். இக்கோவிலில் சூரியன், பிரதானமாக இருப்பினும் மற்ற 8 கிரகங்களும் சூரியனைச் சுற்றி தனித்தனி சந்நிதிகளில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆயுதம் எதுவும் இல்லாமல், வாகனமும் இன்றி அமைதி புன்முறுவல் தவழும் முகத்துடன் அருள்பாலிக்கின்றனர்.
முக்காலம் அறியும் மூதறிவு உடைய காலவ முனிவர் என்பவர் தமக்குத் தொழு நோய் வரவிருப்பதையறிந்து , நவகிரகங்களை நோக்கி தவம் செய்து , தொழு நோய் அணுகாதப்படி அவர்களிடம் வரம் பெற்றார். இதையறிந்த நான்முகன், வரம் கொடுக்கத் தகுதியில்லை எனக்கூறி, நவக்கிரகங்களை தொழுநோய் அடைந்து துன்புற சாபமிட்டார். நவகிரகங்களும் வருத்தமடைந்து சாபவிமோசனம் கோர , நான்முகனும் அவர்களை வெள்ளெருக்கங்காடாயுள்ள திருமங்கலக்குடி என்னும் பதியில் எழுந்தருளியுள்ள பிராணவரதரையும் , மங்களநாயகியையும் வழிபடுமாறும் , அங்கு தங்கி வழிபடவேண்டிய முறையினையும் எடுத்துக் கூறினார்.

நவக்கிரகங்கள் இப்பதியை அடைந்த போது , தொழுநோய் அவர்களைப் பற்றிக் கொண்டது. அங்கிருந்த மகரிஷி அகத்தியர் அவர்கள் மீது இரக்கம் கொண்டு , தவம் செய்ய வேண்டிய இடத்தினையும் , முறையினையும் எடுத்துக் கூறினார். வழிபாட்டின் முடிவில் தொழுநோய் நீங்கப் பெற்ற அவர்கள் முன்னிலையில் பிராணவரதரும் , மங்களநாயகியும் காட்சி கொடுத்து , அவர்களுக்குத் தனி ஆலயம் உண்டாக்கவும் , அவர்களை வழிபடுவோர்க்குச் சுதந்திரமாக அனுக்கிரகம் செய்ய வரம் அருளினர். அவ்வாறு ஏற்பட்ட நவகிரகங்களின் தனி ஆலயமே சூரியனார் கோவில் ஆகும்.
சூரியனார் கோவிலை வழிபடுகிறவர்கள் திருமங்கலக்குடி ஆலயத்தையும் அவசியம் வழிபட வேண்டும். இரெண்டு தலமும் முற்காலத்தில் அர்க்கவனம் என ஒரே தலமாக இருந்து , பின்பு இரெண்டு தலங்களாகப் பிரிந்துள்ளன. இரெண்டு தலங்களுக்கும் தல விருட்சம் எருக்கச் செடியாகும்.

சூரிய பகவானே நவக்கிரகங்களின் தலைவர். இவர் சாத்வீக குணமாகவும் , சிவனின் முக்கண்களில் வலக்கண்ணாகவும் இருப்பவர். புகழ், மங்களம், உடல் நலம் , ஆட்சித் திறமை , செல்வாக்கு, முதலியன கொடுப்பவர். இவரை சிகப்பு மலர்களால் அர்ச்சிப்பதாலும், சிகப்பு வஸ்திரம் , மாணிக்கம் அணிந்து கொள்வதாலும் , ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதாலும் , சிகப்பு நிறப்பசு , கோதுமை தானம் செய்வதாலும் , சூரிய நமஸ்காரம் செய்து வருவதாலும் , சூரிய கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பர்.

சூரியன் ஜாதகத்தில் நீச பலத்துடன் இருப்பின் , தலையில் காயம், எழும்பு முறிவு , கண் நோய், நரம்பு தளர்ச்சி , உஷ்ண நோய், ஆஸ்த்மா முதலியன வர வாய்ப்புண்டு. இதற்கு சூரியனை வழிபட்டு நிவாரணம் பெறலாம். இதற்காக சூரிய தியானம், காயத்திரி , சூரிய மந்திரம் , சூரிய கவசம் , சூரிய அஷ்டோத்திரம் முதலியன உள்ளன. இராமபிரானுக்கு போரின் போது மகரிஷி அகஸ்தியர் அருளிய ஆதித்ய ஹ்ருதயம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாகும். தினமும் இதனை நாம் கூறி வாழ்வில் வெற்றி பெறலாம். வடநாட்டில் ஒரிசாவில் பூரிக்கு அருகில் உள்ள கோனார்க் என்ற இடத்தில் சூரியனுக்கு என்று ஒரு கோவில் அமைந்துள்ளது போன்று தென்னாட்டில் சூரியனுக்கு என்று அமைந்துள்ள ஒரே கோவில் இதுவாகும்.

திங்கள் – திங்களூர்

Thiruvaiyaru-temple.
Thiruvaiyaru-temple-kumbakonam

இத்தலம் திருநாவுக்கரசு ஸ்வாமிகளுக்கு கயிலை காட்சி தந்தருளிய திருவையாற்றுக்கு கிழக்கில் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பண்டைக் காலத்தில் கீழுர் என்று அழைக்கப்பெற்ற இத்தலத்தில் எழுந்தருளியுள்ள கைலாசநாதரை சந்திரன் வழிபாடுகள் செய்து தன் குறைகளை நிவர்த்தி செய்து கொண்டமையால் , திங்களூர் என்னும் சிறப்புப் பெயர் உண்டாயிற்று. இத்தலத்திலுள்ள கோவில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் அருள்மிகு கைலாசநாதர் ஆகும். அம்பாள் பெயர் பெரியநாயகி அம்மன் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீபெருந்தேவி நாயகி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாளும் எழுந்தருளியுள்ளனர்.

பங்குனி உத்திர நட்சத்திரம் பொர்ணமி தினம் இத்தினத்திற்கு முதல் நாள் , இத்தினத்திற்கு மறுநாள் ஆக மூன்று நாட்களும் , சூரியன் உதயமாகும் போது சூரியனுடைய ஒளிக்கதிர்களும் , மேற்கண்ட மூன்று நாட்களிலும் , மாலையில் சந்திரன் உதயமாகும் போது , சந்திரனுடைய ஒளிக்கதிர்களும் சிவலிங்கத்தின் மீது படரும். அது சமயம் தீபாராதனைகளும் அர்ச்சனைகளும் வழிபாடுகளும் நடைபெறும். இத்தலத்தில் மட்டுமே ஒரே நாளில் , இரெண்டு கிரகங்களின் பூசனைகள் காலையிலும் , மாலையிலும் நடைபெற்று வருவது அதிசயத்தக்கதாகும் . இச்சிறப்பு வேறு எங்கும் கிடையாது. கைலாசநாதருக்கு எதிரில் வடகிழக்கு மூலையில் சந்திர பகவான் தனிச் சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

திங்களூர் சந்திர புஸ்கரணியில் நீராடி , வெள்ளரளி , பச்சை அரிசி , பொங்கல் செய்து மூலவர் சிவபெருமானுக்கு வெள்ளை நிற வஸ்திரமும் , சந்திரனுக்கு வெள்ளை நிற வஸ்திரமும் அணிவித்து , முத்து பதித்த ஆபரணமோ, வெள்ளை மோதிரமோ அணிந்தும் , சந்திர தோஷ காலத்தில் விரதம் இருந்தும் சந்திர தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள். திங்கட்கிழமை வரும் பௌர்ணமியன்று திங்களூர் இறைவனை வழிபடுவது சிறப்பு மிகுந்தது. கார்த்திகை மாத சோமவார விரதம், சித்திரை மாத பௌர்ணமி விரதம், லலிதா சகஸ்ரநாம பாராயணம் , அபிராமி அந்தாதி பாராயணம், சந்திர காயத்திரி மந்திரம், சந்திர கவசம் , அஷ்டோத்ர சதநாமாவளி பாராயணம் ஆகியவை மூலம் நமக்கு வளம் பெருகும் ; வற்றாத செல்வம் சேரும் என்பர். நமது மனதினைச் செலுத்தும் கிரகம் சந்திரன் என்பதால் , 27 நட்சத்திரங்களையும் 27 பெண்களாக உருவகப்படுத்தி , அவர்களின் கணவனாக சந்திரனைக் கூறுகிறார்கள் . எனவே எந்த நட்சத்திரத்தில் பிறந்தவராயிருந்தாலும் இங்குள்ள சந்திரனை வணங்கி , சந்திரன் வணங்கி அருள்பெற்ற அம்மை அப்பனை நாமும் வழிபட்டு வரலாம்.

செவ்வாய் – வைத்தீஸ்வரன் கோவில்

Vaitheeswaran-temple
Vaitheeswaran-temple-sirkazhi

சிவபெருமான் உமா தேவியைப் பிரிந்து தனித்துக் கல்லால மரத்தின் கீழ் யோகத்திலிருந்தபோது , அவரது நெற்றிக் கண்ணிலிருந்து நீர்த்துளி ஒன்று பூமியில் விழுந்த போது அதிலிருந்து தோன்றியவர் அங்காரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தவர் முருகன். இருவரும் நெற்றிக்கண்ணிலிருந்து உதித்ததால் இவர் முருகனின் அம்சம் என்பர். இவர் சிவந்த நிறம்முடையவர் . நான்கு திருக்கரங்களும் , சிங்கவாகனத்தையும் உடையவர்.

சோழ நாட்டில் சீர்காழிக்கு மிக அருகில் , காவிரி நதியின் வட பால் அமைந்துள்ள திருப்புல்லாணிக்கு வேலூர் என்ற புராண பெயர் உண்டு. தற்போது வைத்தீஸ்வரன் கோவில் என்று அழைக்கப்படும் தலம் அங்கார தலம் என்று போற்றப்படுகிறது. இக்கோவிலுக்குள் உள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி , இறைவன் வைத்திய நாதரையும் அம்மை தையல் நாயகியையும் வழிபட்டே அங்காரகன் கிரக பதவியை அடைந்ததாகவும், அவருடைய செங்குட்ட நோய் நீங்கியதாகவும் கூறுவர்.
தன்னை வழிபடுபவர்க்கு இன்பங்கள் தந்து அவர்களின் தீரா நோயினைத் தீர்த்தருள மந்திரமும் ,தந்திரமும் மருந்துமாகி , வைத்தியநாதர் என்ற திருப்பெயருடன் இறைவன் காட்சியருளுகிறார். இங்கு எழுந்தருளியுள்ள முருகனின் திருநாமம் திரு செல்வமுத்துக்குமார சாமி ஆகும். இவ்வாலயத்தின் கீழ்த்திசையில் பைரவரும் , மேற்குத்திசையில் வீரபத்திரரும் , தென்திசையில் கற்பக விநாயகரும் , வடதிசையில் காளியும் அமர்ந்து காவல் புரிகின்றார்.

கிழக்கு வெளிப்பிரகாரத்தில் தல விருட்சம் வேம்பு மரத்தினடியில் எழுந்தருளியுள்ள சிவனே ஆதி வைத்தியநாதர் என்பர்.  தினசரி அர்த்த யாம பூசா காலத்தில் ஸ்ரீ செல்வமுத்துக்குமார சாமிக்கு வழிபாடுகள் நடந்த பின்னரே , ஸ்வாமிக்கு வழிபாடு நடைபெறும். இதற்குப் புழுகாப்பு தரிசனம் என்று பெயர். இதுவே இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். அங்காரக சேத்திரமானதால் , செவ்வாய்க்கிழமை தோறும் மாலையில் ஆட்டுக்கிடா வாகனத்தில் அங்காரகன் எழுந்தருளி பிரகாரம் வலம் வருவார்.
செவ்வாய் திருமண விசயத்தில் அதிக பாதிப்புகளைத் தந்து மக்களை ஆட்டிப் படைக்கிறார் என்பர். இதனையே செவ்வாய் தோஷம் என்பர். மீளமுடியாத கடன் , சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை , உடல் நலனில் பாதிப்பு , ரத்த காயம் படுதல் , வாகன விபத்து, நிலம் வீடு , மனை சார்ந்த வகையில் பிரச்சனைகள், நெருப்பு – மின்சாரம் ஆகியவற்றால் ஆபத்து, எதிரிகளின் தொல்லை ஆகியவை செவ்வாய் தோஷத்தின் பாதிப்புகள் என்பர். இவற்றிலிருந்து தப்பிக்க , செவ்வாய் காயத்திரி மந்திரம் , தியானம் , சூரிய கவசம் , அஷ்டோத்திரம் போன்றவற்றை பக்தியோடு படித்தும் , இத்தலத்திற்குச் சென்று அம்மை, அப்பன் , முருகன், செவ்வாய் ஆகியோரை வழிபட்டு ,தீர்த்தமாடி , தானதருமங்கள் செய்தும் நிவர்த்தி பெறலாம் . கார்த்திகை மற்றும் செவ்வாய் கிழமை தோறும் விரதம் அனுஷ்டித்தாலும் செவ்வாய் தோஷங்கள் நீங்கும் என்பர்.

புதன் – திருவெண்காடு

thiruvengadu-temple
thiruvengadu-temple

புதன் நவக்கிரகமூர்த்திகளில் நான்காமவர்; புதன் சிவபெருமானை வணங்கி , நவகோள்களில் ஒருவரான தலம் திருவெண்காடு ஆகும். இத்தலம் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. இத்தலத்திற்குத் தெற்கில் காவிரியாறும் , வடக்கில் மணிகர்ணிகை ஆறும் , கிழக்கில் அலைக்கடலும் அணி செய்கின்றன. சீர்காழியிலிருந்தும் , மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
காசிக்குச் சமமாகத் திகழும் ஆறு தலங்களுள் இதுவும் ஒன்று. இங்கு சுவேதாரண்யேசுவரர் , நடராசர், அகோரமூர்த்தி என சிவமூர்த்திகள் மூவர்; அக்னி தீர்த்தம் , சூரிய தீர்த்தம் , சந்திர தீர்த்தம் என தீர்த்தங்கள் மூன்று. ஆல், கொன்றை, வில்வம் என தல விருட்சங்கள் மூன்று ஆகும். நால்வராலும் பாடப்பட்ட தலம் , ஐம்பத்தோர் சக்தி பீடங்களில் ஒன்று. சிவனின் 64 மூர்த்தி பேதங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும். இது ஆதி சிதம்பரம் எனப்படும். சிதம்பரத்தில் நிர்க்குணமாக ஆடி முக்தியை நல்கும் நடராஜர் இங்கு சகுணமாக ஆடி இருமைப் பயனும் தருகிறார். சைவசித்தாந்த முதல் நூலையருளிய மெய்கண்ட தேவநாயனார் அவதரித்த தலம் . பட்டினத்தடிகள் சிவதீட்சை பெற்ற தலம். சிறுத்தொண்டர் , திருவெண்காட்டு நங்கை , சந்தனத்தாதி ஆகியோர் பிறந்த தலம். இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் சுவேதாரண்யசுவர் ; அம்பாள் பெயர் பிரம்மவித்யாம்பிகை ஆகும். இத்தலத்தின் தனிச் சிறப்புக்குரியவர் அகோர மூர்த்தியாவார். மருத்துவன் என்னும் அசுரனைக் கொள்ள , சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகத்திலிருந்து தோன்றியவர். இவருடைய திருவுருவைக் காணக் கண்கோடி வேண்டும் என்பர்.

புதன் சகலகலைகளிலும் வல்லவர். மகா ஞானியாவர். இவர் சந்திரனுக்கும் , தாரைக்கும் மகன் ஆவார். இத்தலத்தில் புதனுக்கு தனிக்கோவில் உள்ளது . கல்வியறிவு, பேச்சுத்திறமை , மொழிகளில் புலமை ஆகியவற்றை தரவல்ல புதன் இக்கோவிலில் அம்பிகை பிரம்மவித்யாம்பிகையின் முன்னர் இடது கை பக்கத்தில் அமைந்திருப்பது பொருத்தமானதே. புதனின் தந்தையான சந்திரனின் கோவிலும் , சந்திர தீர்த்தமும், இவர் சந்நிதிக்கு எதிரில் அமைந்துள்ளன. புதன் ஜாதகத்தில் சரியாக அமையாவிட்டால் , அறிவுக்குறைபாடு, கல்வியில் மந்த நிலை, நரம்புத் தளர்ச்சி முதலியன ஏற்படலாம். இக்குறைகளை நீக்கிக் கொள்ள , இத்தலத்திற்கு மக்கள் வந்து புதனை வழிபட்டு , நிவர்த்தி செய்து கொள்கிறார்கள். மகா விஷ்ணுவை வழிபடுவதாலும் , பச்சை நிறப்பட்டு , பச்சை கல் தரிப்பதாலும் , விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதாலும் , புதன் கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பர். இவரை வெண் காந்தள் மலர் கொண்டு அர்ச்சனை செய்வதாலும் , புதன் கிரக சேத்திரமான மதுரை சென்று சொக்கநாதர்மீனாட்சியை வழிபடுவதாலும் புதன் அனுக்கிரகம் பெறலாம் என்பர்.

வியாழன் – ஆலங்குடி

aalangudi-navagraha temple
aalangudi-navagraha temple

திரு இரும்பூளை என்னும் புராணப் பெயர் கொண்டு தற்போது ஆலங்குடி என்று அழைக்கப்படும் இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் வலங்கைமான் வட்டாரத்தில் , நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வடக்கில் 4 கி.மீ தொலைவிலும் கும்பகோணத்திற்கு தெற்கில் 11 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளது. ஆதியில் பூளைச் செடிகள் நிறைந்த காடாக இருந்தமையால் இப்பெயர் பெற்றது என்பர்.  பிரஹஸ்பதி என அழைக்கப்படும் வியாழபகவான் , இங்குள்ள தட்சிணாமூர்த்தியை தவமிருந்து வழிபட்டதால் , தேவகுரு என்ற பதவியை அடைந்தார் என்பர். குருபகவான் என்றும் அழைக்கப்படும் இவர் பிரம்மதேவரின் மானசபுத்திரர்களில் ஒருவரான அங்கீரிச முனிவருக்கும் வசுதா என்பவருக்கும் பிறந்தவர் ஆவார். இவர் சுபக்கிரகர்.

முக்குணங்களில் சாத்வீக குணமுடையவர். மஞ்சள் நிறமுடையவர். பொன்னன் என்றும் அழைக்கப்படுபவர். பொன்னிறம், சந்தனம் , பொன்னிற மலர், பொன்னாடை, பொற்குடை, புஷபராகம், மஞ்சள் நிற வஸ்திரம் , முல்லை மலர், பச்சைக் கடலை முதலியன இவர் விரும்புபவை ஆகும். குரு பார்க்க கோடி தோஷம் விலகும் என்பர். எந்த கிரகத்தின் தோஷத்தையும் தமது பார்வையின் வலிமையால் , குறைக்கவோ , முழுமையாக நீக்கவோ செய்பவர் குருபகவான்.
வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தியை வலம் வருதல் , குருவை மஞ்சள் வஸ்திரம் சாத்தி , முல்லை மலரால் அர்ச்சித்தல் ஆகியவை செய்து குரு அருள் பெறலாம். நவகிரகங்களில் ஒன்றான குருவையும் , சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தியையும் ஒன்றாக நினைத்து வழிபடுதல் கூடாது. குருவின் மூலமாக தட்சிணாமூர்த்தியின் பூரண அனுக்கிரகம் பெறலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இத்திருக்கோவிலின் மூலவர் பெயர் ஆபத்சகாயேஸ்வரர், அம்பாள் பெயர் ஏலவார் குழலியம்மை ஆகும். தேவர்கள் அமுதத்திற்காக திருப்பாற்கடலை கடைந்த போது , வெளிப்பட்ட விஷத்தை உண்டு தேவர்களைக் காத்தமையால் , இவ்வூருக்கு ஆலங்குடி என்றும் , இறைவனுக்கு ஆபத்சகாயேஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது. இவ்வூரில் அரவு தீண்டி மரித்தவர்களே கிடையாது என்பர். இங்குள்ள விநாயகருக்கு “கலங்காமல் காத்த விநாயகர் ” என்று பெயர். கஜமுகாசுரனிடமிருந்து தேவர்களைக் காத்தமையால் இப்பெயர் என்பர். சுந்தரர் இத்தலத்திற்கு வந்து முறைப்படி வணங்கி , வழிபட்டு தட்சிணாமூர்த்தியை தரிசித்து ஞானோபதேசம் பெற்றார் என்பர். இத்தலத்தில் உள்ள இம்மூர்த்தியைக் குருவாரத்தில் வணங்கி வழிபடுவோருக்கு சிவஞானம் எளிதில் கைகூடும் என்பர். தஞ்சாவூர் அருகிலுள்ள தென்குடித்திட்டை , சென்னைக்கு அருகிலுள்ள திருவலிதாயம் ஆகிய இடங்களில் குருபகவான் வழிபட்டு பேரு பெற்றுள்ளார். திருச்செந்தூரில் திருமுருகனுக்கு அரக்கர்களுடைய வரலாற்றினை குரு பகவான் எடுத்துக் கூறி வழிபட்டுள்ளார். ஆகவே இம்மூன்று இடங்களுக்கும் சென்று அங்குள்ள மூலவர்களையும் , குருபகவானையும் வழிபட்டு வந்தால் குருவினுடைய அருள் கிடைக்கும் என்பர்.

சுக்கிரன் – திருக்கஞ்சனூர்

thiru kanjanoor temple
thiru kanjanoor temple

இத்தலம் கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ தூரத்திலும் ,சூரியனார் கோவிலில்லிருந்து 3 கி.மீ தூரத்திலும் உள்ளது. இத்தலத்து இறைவன் பெயர் அக்னீஸ்வரர், அம்பாள் பெயர் கற்பகநாயகி ஆகும். மானக்கஞ்சாற நாயனார் அவதரித்த தலம் . ஹரதத்தர் என்னும் சிவாச்சாரியார் பழுக்கக்காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்து சிவமே பரம்பொருள் என்று நிரூபித்த தலம் ஆகும். பஞ்சாட்சரம் ஒரு தடவை கூறினாலேயே தோஷம் நீங்கும் என்பதை கல் நந்தியைப் புள் தின்ன வைத்து இவர் நிரூபித்த தலம்.
சுக்கிர பகவான் பிரம்ம தேவரின் மானசபுத்திரர்களில் ஒருவரான பிருகு முனிவருக்கும் புலோமசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவர். இவருக்கு வெள்ளி, அசுரகுரு, பார்க்கவன் போன்ற பல பெயர்கள் உண்டு. இவர் வெண்மை நிறம் உடையவர்; சகலகலா வல்லவர் ; கவிஞர் ; மழைக்கு அதிபதி; அக்னிக்கும் அதிபதி; இவர் தன்னை வழிபடுபவர்களுக்கு நன்மதிப்பையும் , அதிர்ஷ்டத்தையும் , சுகபோகத்தையும் அருள்பவர்.

இவர் காசியில் லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து , ஆயிரம் கோடி ஆண்டுகள் கடுந் தவம் செய்ததால் , இறந்தவரை உயிர் பெறச் செய்யும் மிருதசஞ்சீவினி விரதத்தை சிவனிடமிருந்து பெற்றவர். தேவர் – அசுரர் போரின் போது மாண்ட அசுரர் அனைவரையும் இவர் மிருதசஞ்சீவினி மந்திரத்தின் மூலம் உயிர் கொடுத்து வந்ததால் , சிவபெருமான் இவரை விழுங்கி விட்டார். சிவன் வயிற்றுக்குள் இருந்த போதும் யுத்தத்தைப் பார்த்துக்கொண்டே ஆயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்தவர். இதனால் சிவன் இவரைக் கருணைக் கூர்ந்து வெளியில் விட்டார்.
சிவன் வயிற்றுக்குள் இருந்து இவர் கடுந்தவம் செய்ததால், சிவன் வேறு – இவர் வேறு என்று கருதாமல் இக்கோவிலில் இவருக்கு தனிச்சந்நிதி அமைக்காமல் , சிவனையே சுக்கிரனாகக் கருதி , சிவனின் உற்சவமூரத்திக்கு சுக்கிரனுடைய அணைத்து வழிபாடுகளும் செய்கிறார்கள் .

மேலும் இவர் அக்னிக்கு அதிபதி என்பதால் , இத்தலத்து இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்று பெயர். சுக்கிரனுக்கு பிரியமானவை மொச்சை, வெண்தாமரை, வெண்ணிற ஆடை , வைரம் , அத்தி முதலியன. இவருக்குப் பிரியமான மேற்கண்டவைகளை நவக்கிரக மேடையிலுள்ள இவருக்கு அளித்தும் , நாம் பயன்படுத்தியும் வந்தால் சுக்கிர கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும். ஸ்ரீரங்கம், திருத்தணி சென்று வழிபட்டும், மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்தும் , ஏழைகளுக்கு தானம் அளித்தும் இவர் அருள் பெறலாம்.

சனி – திருநள்ளாறு

thirunallar-temple
Thirunallar Sani Sthalam

நவக்கிரகங்களில் சனீஸ்வரனுக்கு உரிய தலம் திருநள்ளாறு ஆகும். கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் 50 கி.மீ தூரத்தில் உள்ளது. இத்தலத்து இறைவன் பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர் , இறைவி பெயர் போகமார்த்த பூண்முலையால் ஆகும். தலவிருட்சம் தர்ப்பை ஆகும். தேவார ஆசிரியர் மூவராலும் பாடப்பெற்றது. இத்தலம் சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. ஒரு அரக்கனை அழிப்பதற்கு உதவிய முசுகுந்த சக்கரவர்த்திக்கு, தேவேந்திரன் ஒன்று போலிருக்கும் தியாகேசரின் ஏழு திருவுருவங்களை பரிசாக அளித்தான். முகுந்தனும் இவ்வேழு திருவுருவங்களையும் ஏழு இடங்களில் பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பினான். அவற்றில் ஒன்றே இத்திருக்கோவிலாகும். இங்குள்ள தியாகராசர் நாகவிடங்கத்தியாகர் நடனம் – உன்மத்த நடனம் என்பர். இங்குள்ள மரகதலிங்கத்தை அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டும்.

விதர்ப்ப நாட்டு மன்னன் வீமசேனன் மகள் தமயந்தியை மணக்க நவக்கிரகங்களில் ஒன்றான சனீஸ்வரன் விரும்பினார். நிடத நட்டு இளவரசன் நளனுக்கும் தமயந்திக்கும் சுயம்வரத்தின் மூலம் திருமணம் முடிந்து விட்டது என்பதை அறிந்த சனீஸ்வரர், பூலோகத்திற்கு வந்து அவர்கள் இருவரையும் வாட்டி வதைக்க திட்டமிட்டார். நலனை சூதாட வைத்து நாடு நகரங்களை இலக்கச் செய்து கானகம் சென்ற இருவரையும் ஒருவரை ஒருவர் பிரியச் செய்து துன்புறுத்தினார். நலனைப் பிரிந்த தமயந்தி தனது தந்தை நாட்டிற்குச் சென்று , நளனை திரும்பவும் அடைவதற்காக தனது தந்தை மூலம் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தாள். இந்நிலையில் காட்டில் ஏற்பட்ட தீயில் நளனை தீண்டிய கார்கோடகன் என்னும் பாம்பை தீயிலிருந்து காப்பாற்றிய போதிலும் நளன் உடல் கருத்து உருமாறினான். அயோத்தி சென்று அங்குள்ள மன்னனிடம் தேரோட்டியாக வேலை செய்தான். தமயந்தியின் சுயம்வரத்திற்கு அயோத்தி மன்னனுடன் தேரோட்டியாக நளனும் வந்து சேர்ந்தான். நளனை அடையாளம் தெரிந்து கொண்ட தமயந்தி அவனுடன் சேர்ந்தாள். தனது மாமனார் மற்றும் அயோத்தி மன்னர் உதவியால் தனது நாட்டை மீட்டிய நளன் பரத்வாஜ முனிவரின் அறிவுரைப்படி , இத்தலத்திற்கு வந்து ஸ்வாமியையும், அம்பாளையும் தரிசித்து அம்மன் சந்நிதி அருகில் தனி சந்நிதியில் அருளாட்சி செய்யும் சனீஸ்வர பகவானைக் கண்டு கழிபேருவகை கொண்டு நிலமதில் விழுந்து வணங்கி , அபிஷேக ஆராதனைகள் செய்து எள் அன்னம் நிவேதித்து , கருப்பு நிற வஸ்திரங்கள் சாத்தி எள் எண்ணெய் விளக்கேற்றி வழிபாடுகள் செய்தான். இதனால் உள்ளம் பூரித்த சனீஸ்வரன் நளனை விட்டு நீங்கி , ஆசீர்வதித்தார். இவ்வாறு சோதனைகள் பல கொடுத்து நலமகராசாவை கொடுமைப்படுத்தி பின் அவரே கதி என்று சரணடைந்தவுடன் நளனை விட்டு நீங்கி ஆசீர்வதித்த ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருநள்ளாறு கோவிலிலே அருளாட்சி செய்கின்றார். மானிடர்களாகிய நாம் சனீஸ்வரனின் சோதனைகள் எவ்வளவு வந்தாலும் கலங்காமல் அவரையே வணங்கினால் அவரே அவற்றை மெதுப்படுத்தி நமக்கு நல்வழி காட்டுவார்.

நலமன்னன் நீராடி சனி நீங்கிய நளதீர்த்தமும், பிரம்மதேவர், இந்திரன்,. அஷ்ட திக்குப்பாலகர்கள், மகரிஷி அகத்தியர் முதலானோர் நீராடிய தீர்த்தங்களும் கோவிலைச் சுற்றியுள்ளன. சனீஸ்வரனுக்கு தனி சந்நிதி அம்மன் சந்நிதி வாயிலில் உள்ளது. வேறு கிரகங்கள் இங்கு இல்லை என்பது தனிச் சிறப்பாகும். சூரிய தேவனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்தவர் சனீஸ்வரன் ஆவார். நம்பியவர்களுக்கு அருளும் நாயகன். நடுநிலையாளர். நீதி வழங்குவதில் நீதி தேவன் போன்றவர். மனிதர்களின் ஆயுள் பலத்திற்கு அதிபதி சனிபகவானே .
இவர் 12 ராசிகளையும் ஒரு முறை சுற்றி வருவதற்கு முப்பது ஆண்டுகள் ஆகும். முப்பது ஆண்டு காலத்தில் இவரது பிடியில் அகப்படாதவர் எவரும் இல்லை. அவரவர் பூர்வ புண்ணியத்திற்கேற்ப சோதித்து பின்பு நலன்களை அளிப்பார்.
சர்வேஸ்வரனையே இவர் சோதிக்க முயன்ற போது சர்வேஸ்வரன் பூலோகத்தில் ஒரு தாமரைத் தடாகத்தில் , ஒரு தாமரை தண்டின் அடியில் மூன்று நாழிகைகள் பதுங்கியிருந்து வெளி வந்து சனீஸ்வரனின் கடமையையும் , கௌரவத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தினார். அதே போன்று சிறு குழந்தையாயிருந்த விநாயகரின் தலை இவருடைய பார்வை பட்டு காணாமல் போனதாகவும் , அதன் பின்னரே விநாயகருக்கு யானையின் தலை வைக்கப்பட்டதாகவும் கூறுவர்.
இவர் இராசிக் கட்டத்தில் உள்ள 12 வீடுகளை கடக்க 30 வருடங்கள் ஆகும். ஒரு வீட்டை கடந்து செல்ல 2 1/2 ஆண்டுகள் ஆகும். ஒருவருடைய வாழ்வில் 7 1/2 சனி 3 முறை வரும். சனியினுடைய ஆளுகைக்கு நாம் உட்படும் போது சனிக்கிழமைகளில் விரதம்மிருந்தும் , தான தர்மங்கள் செய்தும், சனியின் வாகனம் காகத்திற்கு அன்னமிட்டும் , ஏழைகளுக்கு கருப்பு வஸ்திரங்கள் வழங்கியும் , சனிபகவானுக்கு அர்ச்சனை செய்தும் , சனீஸ்வரபகவனை வழிபட்டாலும் திருநள்ளாறு சென்று தர்பாரேண்யேஸ்வரரையும் , அம்பாளையும் , சனீஸ்வரனையும் வழிபட்டு வந்தாலும் , சனீஸ்வரனுடைய பிடியிலிருந்து விடுபட்டு சோதனைகளைக் கடந்து , எல்லா நன்மைகளும் ஏற்படும். துன்பங்கள் அகலும்.

இராகு – திருநாகேஸ்வரம்

Thirunageswaram-temple
Thirunageswaram-temple

கும்பகோணத்திற்கு கிழக்கே 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருநாகேஸ்வரம் என்னும் தலம் இராகு பகவான் சிவபெருமானை பூஜித்த திருத்தலமாகும். நாகராஜாவாகிய இராகு பூஜித்தமையால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது. இக்கோவிலில் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் இவர் தனது இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். புராண வரலாற்றின் படி இத்தலத்தில் இராகு பகவான் ஸ்ரீ நாகநாத ஸ்வாமியை வழிபட்டதோடு , இத்தலத்திற்கு வந்து , தன்னையும் வழிபடுவோர்க்கு பல நலன்களை அருளும் வரமும் பெற்றுத் திகழ்கின்றார். பூமியுடன் சேர்ந்து 9 கிரகங்களும் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கின்றன.

முதல் ஏழு கிரகங்களும் பிரதட்சணமாக சுற்றி வரும் போது , ராகுவும் , கேதுவும் அப்பிரதட்சணமாக அவற்றிற்கு எதிர் திசையில் சுற்றி வருகின்றன. இராகுவும் , கேதுவும் நிழல் கிரகங்கள் எனப்படும். மற்ற 7 கிரகங்களை விட இராகுவும், கேதுவும் மிகவும் பலம் பொருந்தியவர்கள். சந்திரனையும், சூரியனையும் பலம் இழக்கும் படியும் அதாவது ஒளி குன்றும்படி கட்டுப்படுத்தும் ஆற்றல் இவ்விருவருக்கும் உண்டு. இராகுவானவர் யோகத்திற்கு அதிபதி. இத்திருக்கோவிலில் தன்னை வழிபடும் மக்களுக்கு அணைத்து நலன்களையும் இராகு பகவான் அருளி வருவதை உணர்ந்து மக்கள் ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பலன் பெறுகிறார்கள்.

பாற்கடல் கடைந்து வெளிப்பட்ட அமுதத்தை திருமால் மோகினி உருவங் கொண்டு , தேவர்களுக்கு மட்டும் வழங்கிய போது , இராகு தேவவுருவம் கொண்டு தேவர்கள் நடுவில் அமர்ந்து அமிர்தம் பெற்ற போது சூரிய ,சந்திரர்கள் திருமாலிடம் இராகுவைக் காட்டிக் கொடுத்தனர். திருமால் தன் கையிலிருந்த அகப்பையால், இராகுவின் தலையில் அடிக்க, தலை அறுபட்டு தனியாக விழுந்தது. அமுதம் உண்டதால் இறக்காமல் இருந்து , தவம் புரிந்து திருக்காளத்தி காளஹஸ்தீஸ்வரர் அருள்பெற்று நவக்கிரகங்களில் ஒருவர் ஆனார். இத்தலத்திற்கு வந்து தவம் செய்து திருநாகேஸ்வரர் அருள் பெற்று தனிச் சந்நிதியில் அமர்ந்து அருள்புரிகிறார்.
இராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது , பால் நீலநிறமாக மாறுவதை நாம் கண் கூடாகக் காணலாம். 16.2.86 அன்று கருவறையைத் திறந்த போது இராகுவின் மீது 51/2 அடி நீளமுள்ள பாம்புச் சட்டை சுற்றியிருப்பதை போது மக்கள் கண்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசித்தனர். அப்பாம்பு சட்டையை தற்போது பக்தர்கள் காண ஒரு கண்ணாடிப் பேழையில் வைத்துள்ளனர்.
இத்தலத்து விநாயகர் சண்பக விநாயகர் எனப்படுகிறார். மூலவருக்கு நாகநாதர், நாகேஸ்வரர், சண்பக ஆரணியேசுவரர் , திருநாகேஸ்வரம் உடையார், மகாதேவர் எனப் பல பெயர்கள் உண்டு. அம்பாள் பெயர் . பிறையணி வாள்நுதல் அம்மை என்பதாகும். இருவருக்கும் நடுவில் முருகன் சோமாஸ்கந்த அமைப்பில் அமர்ந்துள்ளார்.இத்தலத்தில் மற்றொரு அம்பாள் கிரிகுஜாம்பிகை என்ற பெயரில் விளங்குகிறார். இவர் தவக்கோலத்தில் அருள்புரிகிறார். இவருக்கு இருபக்கமும் கலைமகளும் , திருமகளும் உள்ளனர். ஒரே சந்நிதியில் முப்பெரும் தேவியாரையும் தரிசிக்கிறோம்.

ஒருவருடைய ஜாதகத்தில் இராகு நல்ல இடத்தில அமைந்தால் , நல்லாட்சி, செல்வாக்கு, குபேர சம்பத்து ஆகியவை கிட்டும். இராகு தோஷமிருந்தால் , கொடூரமான பலன்கள் விளையும். விஷப்பயம் , வாயு, வலிப்பு, வெட்டுக்காயம், பிளவை , விளங்கிடுதல், ஏற்றத்தாழ்வு முதலியன ஏற்படும் . இராகு பிரீதியாக , துர்கை, பத்ரகாளியை வணங்க வேண்டும். உளுந்து தானியத்தை தானம் செய்தும் தோஷம் நீங்கலாம். சிறந்த சிவபக்தரான இராகுபகவான் , இராமேஸ்வரம், காளஹஸ்தி , திருக்களர் , திருப்பாம்புபுரம் ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் , இத்தலத்திற்கு வந்து , இரு தேவியருடன் தனிக்கோவில் கொண்டுள்ள இவரை நாம் ஞாயிற்றுக்கிழமைகளில் இராகு காலத்தில் வழிபட்டு, தோஷம் நீங்கப் பெறலாம். இராகு காலத்தில் இராகு பகவானை பூஜித்து அருள் பெறலாம்.

கேது – கீழப்பெரும்பள்ளம்

keelaperumpallam temple
keelaperumpallam temple

இத்தலத்தின் சுவாமி பெயர் நாகநாதர்; அம்பாள் பெயர் சௌதர்யா நாயகி; இங்குள்ள தீர்த்தம் வாசுகிப்பாம்பால் உண்டாக்கப்பட்டது. இந்த தீர்த்த நீரினால் தான் ஸ்வாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் தர்மக்குளம் பேருந்து நிலையத்திலிருந்து சற்றுத் தொலைவில் உள்ளது. கிழக்கு நோக்கிய சந்நிதி உடையது. தல விருட்சம் மூங்கில் ஆகும். மூவராலும் பாடப் பெற்றது. இத்தலத்தின் புராணப் பெயர் திருவலம்புரம் ஆகும். காவிரிக்கு வலப்புறம் அமைந்துள்ளதால் இப்பெயர் என்பர். திருமால் வழிபட்டு வலம்புரிச் சங்கு பெற்ற தலமாகும். இத்தலம் கேதுவுக்குரிய தலம் என்பர். மூலவர் மணலில் உருவாக்கப்பட்ட லிங்கம் . சிரசில் கை நுழையும் அளவிற்கு இருபள்ளங்கள் உள்ளன. சிரசில் கவசமிட்டுத்தான் அபிஷேகம் செய்வர்.

மூலவருக்கு வடகிழக்கு மூலையில் கேது பகவான் கை கூப்பிய நிலையில் உள்ளார். இராகுவை யோககாரகன் என்றும் கேதுவை ஞானகாரகன் என்றும் கூறுவர். இருவரும் திருக்காளத்தி நாதரை வழிபட்டே கிரக அந்தஸ்து பெற்றனர். பாற்கடல் கடைந்த போது வெட்டுப்பட்ட அரக்கனின் தலை இராகு ஆனது. உடல் பகுதியே கேதுவாகும். இவர் விஷ்ணுவை நோக்கித் தவம் செய்து பாம்புத்தலையைப் பெற்றார். இவர் அருள்பலம் , ஆன்ம பலம் , நினைவாற்றல் , ஞானமார்க்கம், மோட்சம் தருபவர். அதே சமயம் கபடம், பரதேசவாசம் , சூனியம், உதிரப்பலி , அக்னி கண்டம் , அகங்காரம் , சிறை , பகை, வம்பு , வழக்கு முதலியன தருபவரும் இவரே. இதற்குப் பரிகாரம் விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்தல் , ஆஞ்சநேயரை துளசியினால் வணங்குதல் , கொள்ளுத் தானியம் தானம் கொடுத்தல் முதலியவை ஆகும். இராகு, கேது இருவராலும் ஜாதகருக்கு ஏற்படும் கெடுதலான பாதிப்புகளை வராமல் தடுக்க இராகு, கேது ஸ்தோத்திரங்களை சொல்வதும் , ராகு காலத்தில் துர்கை அம்மனை வழிபடுவதும் நல்லது. ஸ்ரீ காளகஸ்தி கோவிலில் காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தாலே இவர்களால் ஏற்படும் கஷ்டங்கள் சீக்கிரம் விலகும் என்பர்.

தமிழக மக்கள் மிக எளிதில் 2,3 தினங்களில் அணைத்து நவக்கிரக பரிகார தலங்களுக்கும் சென்று தரிசித்து வரலாம். கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையில் தங்கியிருந்து இக்கோவில்களுக்குச் சென்று வரலாம். இக்கோவில்களிலுள்ள இறைவனையும் , அம்பிகையையும் தரிசித்து வழிபட்டால் , அவர்களின் ஆணையின் படி நவகிரகங்கள் நமக்கு நன்மையே செய்வர் என்றும், ஜாதகங்களின் படி நடைபெற வேண்டிய முன்வினைகளின் படி நமக்கு வர வேண்டிய சோதனைகளையும் , கஷ்டங்களையும் முழுவதும் நீக்கியும் அல்லது மெதுப்படுத்தியும் அருளுவர் என்ற முழு நம்பிக்கையில் நாம் இக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவோம்.
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் வணங்குவோம்….

Description

Sun, Moon, Mars, Wednesday, Jupiter, Friday, Saturn, Rahu, and Ketu are the Nine Navagraha. Maiyalaturai, Tiruvaiyaru, Thiruvenkadu,Alangudi,Thirunallar, Thirunageswaram, Kīḻperum paḷḷam, Thanjai, and vellore these are around the district of Kumbakonam. If you worship the Lord and Ambika in these temples, they will do good to us according to their orders.

37 COMMENTS

 1. I spent four years trying EVERYTHING in Online Dating, and through a huge amount of trial and error, I produced a system that I will share for you. This book will take you, step by step, through everything you need to know to double, triple or even quadruple the number of women you meet online.

 2. Thank you so much for providing individuals with such a breathtaking opportunity to read critical reviews from here. It can be very pleasing and as well , packed with amusement for me and my office fellow workers to search your web site on the least 3 times per week to read through the new guides you have got. And indeed, I’m so certainly impressed considering the gorgeous tips and hints you serve. Some two facts in this article are indeed the finest we have ever had.

 3. I want to express my appreciation to the writer just for rescuing me from this problem. Right after checking throughout the internet and coming across proposals which are not productive, I figured my life was gone. Living devoid of the answers to the problems you’ve sorted out all through your main guide is a crucial case, as well as those which may have adversely damaged my career if I had not noticed the website. Your main ability and kindness in handling the whole lot was important. I’m not sure what I would have done if I had not come across such a thing like this. I am able to now relish my future. Thank you so much for this skilled and results-oriented help. I won’t think twice to propose the blog to anybody who desires tips about this situation.

 4. I simply desired to say thanks once again. I’m not certain the things that I would’ve gone through in the absence of the actual information shared by you regarding such problem. It was an absolute traumatic matter for me personally, but noticing this specialised style you dealt with the issue took me to jump over joy. Now i’m happy for the advice and even expect you know what a great job you happen to be doing training the mediocre ones using your web blog. Most likely you haven’t come across any of us.

 5. I am commenting to make you be aware of of the wonderful encounter my daughter found checking your web page. She picked up a good number of issues, which included how it is like to possess an incredible teaching heart to let most people quite simply gain knowledge of chosen very confusing matters. You truly exceeded her expectations. Thanks for showing these insightful, healthy, explanatory as well as fun tips on your topic to Lizeth.

 6. Thanks for your entire effort on this web page. Debby delights in making time for research and it’s really easy to understand why. We learn all relating to the dynamic manner you produce informative techniques by means of your website and invigorate response from other ones about this matter so my child has always been studying so much. Enjoy the remaining portion of the year. You have been conducting a brilliant job.

 7. I want to point out my admiration for your generosity in support of people who really want guidance on the concern. Your real dedication to passing the message along has been really advantageous and have consistently helped employees just like me to reach their desired goals. The warm and helpful guide entails much to me and somewhat more to my office workers. Best wishes; from all of us.

 8. Thank you for each of your efforts on this web page. Kate really loves conducting investigations and it is easy to understand why. A lot of people learn all relating to the lively manner you deliver informative strategies via the web site and therefore recommend contribution from others on that article while our favorite princess is certainly discovering a lot. Enjoy the rest of the new year. You’re carrying out a stunning job.

 9. I simply needed to say thanks again. I’m not certain the things I might have gone through without the actual points shown by you regarding such situation. It became a traumatic matter in my circumstances, nevertheless discovering a new well-written fashion you dealt with that forced me to weep with joy. Extremely thankful for this information and even hope you know what a great job you are getting into teaching people all through a site. I am certain you’ve never come across all of us.

 10. My spouse and i have been absolutely fortunate that Emmanuel managed to complete his reports using the precious recommendations he obtained from your web pages. It is now and again perplexing just to be giving out methods that others may have been selling. And we all do know we need the blog owner to give thanks to for that. All of the explanations you have made, the easy site navigation, the relationships you can aid to foster – it’s got many exceptional, and it is leading our son and us believe that the content is interesting, which is very essential. Thank you for the whole thing!

 11. My husband and i have been quite thrilled Emmanuel could finish off his basic research from the precious recommendations he gained through your web pages. It’s not at all simplistic to simply choose to be making a gift of instructions which some others have been making money from. We understand we now have the writer to be grateful to because of that. The explanations you’ve made, the simple website navigation, the friendships you can make it easier to create – it’s mostly powerful, and it is helping our son in addition to the family believe that that idea is cool, and that is seriously indispensable. Thanks for the whole lot!

 12. I want to show my affection for your generosity supporting folks that must have help with that idea. Your special dedication to passing the solution all over ended up being rather advantageous and have continually permitted somebody just like me to realize their objectives. The informative publication can mean a whole lot a person like me and substantially more to my peers. Regards; from each one of us.

 13. I wish to show thanks to you just for bailing me out of this particular scenario. As a result of checking throughout the internet and obtaining ways which are not productive, I figured my entire life was well over. Being alive without the presence of solutions to the difficulties you have resolved by means of your entire guide is a crucial case, and ones that might have badly affected my entire career if I had not noticed your blog. Your actual capability and kindness in controlling a lot of stuff was very helpful. I’m not sure what I would have done if I hadn’t discovered such a step like this. I’m able to at this time look forward to my future. Thanks very much for your expert and result oriented help. I won’t be reluctant to recommend your web page to any person who will need assistance about this subject.

 14. I needed to send you one little observation just to thank you so much yet again on the wonderful thoughts you have documented above. This has been so seriously generous of people like you to provide publicly what exactly many of us might have offered for an e-book to help with making some cash for themselves, primarily considering that you might have tried it if you ever wanted. Those points additionally served to become a great way to understand that some people have the identical keenness much like my very own to grasp a whole lot more concerning this issue. I am certain there are several more fun instances ahead for individuals that see your blog post.

 15. I must show thanks to you for bailing me out of such a challenge. As a result of surfing throughout the the web and meeting principles that were not pleasant, I assumed my life was done. Living without the approaches to the issues you’ve fixed by means of your entire website is a critical case, and those that could have adversely damaged my entire career if I had not noticed your blog. Your own personal competence and kindness in playing with all areas was very helpful. I’m not sure what I would’ve done if I hadn’t come upon such a solution like this. It’s possible to at this point look forward to my future. Thanks a lot so much for your professional and amazing guide. I won’t hesitate to suggest your web blog to anyone who wants and needs guidelines about this matter.

 16. Thanks so much for giving everyone an extremely marvellous opportunity to read in detail from here. It’s usually so sweet plus stuffed with fun for me and my office acquaintances to search your website nearly thrice a week to read the fresh stuff you have got. And lastly, I’m certainly impressed considering the brilliant things you serve. Selected 1 points in this posting are without a doubt the most suitable I have had.

 17. My spouse and i felt very thankful Peter could finish off his survey through the entire precious recommendations he gained through the web page. It is now and again perplexing to simply happen to be releasing thoughts which many people could have been making money from. And we recognize we have the blog owner to be grateful to for that. Those explanations you have made, the simple site menu, the friendships your site make it easier to foster – it’s mostly excellent, and it is assisting our son and us believe that the subject is enjoyable, which is certainly pretty essential. Many thanks for everything!

 18. I have to show appreciation to this writer just for bailing me out of such a predicament. Because of browsing through the world wide web and finding suggestions which are not powerful, I thought my entire life was well over. Being alive without the approaches to the issues you have resolved all through your good article is a serious case, and the kind which might have adversely affected my entire career if I hadn’t encountered your blog post. Your own personal training and kindness in dealing with all things was priceless. I am not sure what I would’ve done if I hadn’t encountered such a stuff like this. It’s possible to now relish my future. Thanks a lot very much for this reliable and sensible help. I won’t be reluctant to refer your web sites to any individual who needs and wants direction on this situation.

 19. A lot of thanks for each of your work on this web site. My mum enjoys carrying out research and it is obvious why. A number of us know all about the powerful form you create worthwhile tricks through the website and as well foster participation from other people on that theme plus our favorite child is always learning a whole lot. Enjoy the remaining portion of the new year. You’re the one conducting a terrific job.

 20. I wanted to post you a very small word to be able to thank you very much the moment again on the spectacular strategies you’ve shown in this article. This is certainly particularly generous with people like you to allow openly what exactly most of us could have advertised for an electronic book to end up making some cash for themselves, most notably now that you could have done it if you ever decided. The points in addition served as the easy way to fully grasp the rest have a similar dreams the same as my personal own to know the truth whole lot more with reference to this issue. I think there are several more pleasant sessions in the future for many who look into your blog.

 21. I and my buddies happened to be looking through the excellent tactics found on your website and before long came up with a horrible suspicion I had not expressed respect to the site owner for those strategies. My women are already happy to read through all of them and have in effect sincerely been making the most of those things. Appreciation for indeed being well considerate and for getting this kind of notable guides millions of individuals are really desirous to understand about. Our own honest regret for not saying thanks to you earlier.

 22. Needed to create you the tiny word so as to say thank you again on the fantastic ideas you’ve documented in this article. It has been so pretty open-handed with you to give easily all most of us might have offered for sale for an ebook to generate some bucks for their own end, particularly seeing that you might well have tried it in case you considered necessary. These good ideas in addition served to be the great way to realize that most people have the identical zeal like mine to see somewhat more with reference to this condition. I’m sure there are lots of more enjoyable situations up front for individuals that view your blog.

 23. Thanks a lot for providing individuals with a very breathtaking possiblity to check tips from here. It is often very great and as well , packed with amusement for me and my office colleagues to visit your website not less than three times per week to read through the new issues you have. Not to mention, I am just at all times fascinated considering the striking inspiring ideas you give. Some 1 tips in this post are honestly the best I have had.

 24. My husband and i got quite more than happy Albert could complete his preliminary research through the entire precious recommendations he acquired from your very own web site. It is now and again perplexing to just be making a gift of tips and tricks that many the rest might have been selling. And we all remember we need the website owner to give thanks to for that. The type of illustrations you’ve made, the easy blog menu, the relationships your site help foster – it’s got mostly overwhelming, and it’s letting our son and the family feel that the idea is interesting, which is really fundamental. Many thanks for all the pieces!

 25. Thanks for your entire hard work on this web site. Debby enjoys carrying out investigations and it’s obvious why. My partner and i learn all relating to the powerful manner you give powerful information through the website and as well increase response from other ones on this content plus our own child has been being taught so much. Enjoy the rest of the year. You’re doing a terrific job.

 26. I happen to be commenting to let you understand what a beneficial experience my friend’s girl gained checking your blog. She realized a lot of details, including what it is like to have a wonderful giving spirit to make many people completely grasp a variety of multifaceted matters. You actually did more than our desires. I appreciate you for supplying the great, trustworthy, explanatory and in addition cool tips on the topic to Emily.

 27. Thank you for all your valuable work on this website. Debby really likes doing research and it’s really easy to see why. Many of us hear all of the powerful medium you provide invaluable strategies via this web blog and encourage participation from website visitors on the article so our own child is always understanding a whole lot. Have fun with the rest of the new year. You are carrying out a tremendous job.

 28. My spouse and i were quite excited that John managed to deal with his investigations by way of the precious recommendations he came across from your own web page. It is now and again perplexing to just choose to be freely giving thoughts that many men and women have been making money from. And we all fully grasp we’ve got the blog owner to thank because of that. All the explanations you’ve made, the easy blog navigation, the friendships you will make it possible to engender – it’s got all fantastic, and it’s letting our son and our family do think the article is pleasurable, which is certainly highly vital. Many thanks for the whole thing!

 29. Needed to send you one bit of observation to finally thank you very much the moment again about the lovely views you’ve featured on this site. This is shockingly generous of people like you to provide extensively exactly what many of us could possibly have advertised for an electronic book to get some money on their own, mostly since you might well have done it in the event you decided. Those ideas likewise served to become a good way to be aware that someone else have a similar zeal just as my personal own to understand much more in terms of this problem. I’m certain there are thousands of more fun situations up front for individuals that go through your site.

 30. A lot of thanks for your whole labor on this blog. My mom really loves setting aside time for research and it is simple to grasp why. My spouse and i learn all regarding the dynamic ways you provide invaluable tips and hints through this blog and as well as encourage participation from some other people on this situation so our own child has always been becoming educated so much. Take advantage of the remaining portion of the year. You’re carrying out a first class job.

 31. Thanks a lot for providing individuals with an extremely remarkable opportunity to check tips from here. It’s always so pleasurable and packed with a good time for me and my office fellow workers to visit your web site not less than thrice weekly to study the fresh secrets you have. Not to mention, I’m just certainly astounded with the incredible secrets served by you. Selected two ideas in this posting are certainly the most effective we have all had.

 32. I simply wanted to jot down a small remark in order to say thanks to you for all of the unique ideas you are giving at this site. My incredibly long internet research has at the end been rewarded with professional facts to share with my close friends. I ‘d declare that we website visitors actually are very fortunate to exist in a perfect site with so many brilliant professionals with great things. I feel very privileged to have seen your web pages and look forward to some more brilliant times reading here. Thank you once again for all the details.

 33. I wish to express my love for your kind-heartedness in support of folks that should have help on this content. Your real dedication to passing the message throughout had been astonishingly important and have continually encouraged some individuals like me to reach their goals. Your valuable facts means a lot to me and additionally to my office workers. Many thanks; from everyone of us.

 34. I needed to send you this tiny observation to finally say thanks again considering the marvelous suggestions you have documented in this case. This is quite generous of you to offer easily just what many individuals could possibly have offered for an e book in making some cash for their own end, mostly now that you could possibly have done it if you ever desired. The solutions as well acted like a great way to comprehend other people online have similar zeal much like my own to see much more with respect to this condition. I believe there are a lot more enjoyable occasions ahead for folks who read carefully your blog.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here